மருத்துவம்

மார்புச் சளியை வெளியேற்ற உதவும் அற்புத கசாயம்

கோவை பாலா

மார்புச் சளியால் அவஸ்தைப்படுபவர்கள் வெற்றிலை துளசி  கசாயத்தைத் தினமும் பயன்படுத்தி வாருங்கள். பலனடையுங்கள்.

தேவையான பொருட்கள்

கார வெற்றிலை      -  3

துளசி இலை.           -  ஒரு கைப்பிடி

தும்பை இலை.        -   ஒரு கைப்பிடி

மஞ்சள் தூள்.           -  இரண்டு சிட்டிகை
           
செய்முறை

முதலில்  வெற்றிலை , துளசி இலை , தும்பை இலை மூன்றையும் சுத்தப் படுத்தி சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 500 மி.லி தண்ணீர் ஊற்றி அதில்  நறுக்கி வைத்துள்ள இலை மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். நன்றாகக் கொதிக்க வைத்து 150 மி.லி அளவாகச் சுண்ட வைத்து கசாயமாக்கி  இறக்கி   வடிகட்டிக் கொள்ளவும்.

பயன்கள்

இந்தக் கசாயம் மார்புச் சளியைக் கரைத்து வெளியேற்ற உதவும் அருமருந்தாகும். இந்த கசாயத்தைத் தயார் செய்து  தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மார்புச் சளி கரைந்து வெளியேறும்.
மூன்று அல்லது ஐந்து நாட்கள் குடித்தால் போதுமானது. 

இரவு படுக்கப்போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று விழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாகச் சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும்
பயன்படுத்தவும்.

- கோவை பாலா 

இயற்கை வாழ்வியல் நலம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்.
Cell  :  96557 58609   ,  75503 24609
Covaibala15@gmail.com  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 11இல் தூத்துக்குடி, கோவில்பட்டியில் கல்லூரி கனவு நிகழ்ச்சி: ஆட்சியா் கோ. லட்சுமிபதி தகவல்

சாத்தான்குளம், தட்டாா்மடம், முதலூரில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

அதிமுக மகளிரணி சாா்பில் ஆறுமுகனேரியில் நீா்மோா் பந்தல் திறப்பு

கோவில்பட்டி தீப்பெட்டி ஆலையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

வெயில் தாக்கத்தால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

SCROLL FOR NEXT