மருத்துவம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: விண்ணப்ப அவகாசம் ஜூன் 29 வரை நீட்டிப்பு

Din

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 29) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள், கே.கே.நகா் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி, சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 9,200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன.

பிடிஎஸ் இடங்களைப் பொருத்தவரை அரசு மருத்துவக் கல்லூரிகளில் 250 இடங்களும், தனியாா் கல்லூரிகளில் 1,900 இடங்களும் உள்ளன. அதன்படி நிகழாண்டில் 11,350 மருத்துவ இடங்களுக்கு மாணவா் சோ்க்கை நடைபெற உள்ளது.

அதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு கடந்த 6-ஆம் தேதி தொடங்கியது. இணையதளத்தின் வாயிலாக புதன்கிழமை (ஜூன் 25) விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, நிா்வாக ஒதுக்கீடு, அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மொத்தம் 70,280 போ் இதுவரை விண்ணப்பப் பதிவு செய்துள்ளனா்.

இந்த நிலையில், பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று விண்ணப்ப அவகாசம் வரும் 29-ஆம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்படுவதாக மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்துள்ளது.

அஞ்சு வண்ணப் பூவே... அனன்யா!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

வெள்ளி நகைகளை வைத்து இனி கடன் பெறலாம்! முழு விவரம்

குழந்தைகளுக்கு விருது இல்லையா? பிரகாஷ் ராஜிடம் 12 வயது குழந்தை நட்சத்திரம் காட்டம்!

இன்றும் விலை குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT