அஜீரணப் பிரச்னைகள் அடிக்கடி ஏற்படுமாயின் பின் வரும் எளிய மருத்துவ குறிப்பை பயன்படுத்தி நலம் பெறலாம்.
* இஞ்சிச் சாறுடன் பாலைக் கலந்து உட்கொண்டால் வயிறு சம்பந்தமான நோய்கள் நீங்கும்.
* பாலையும் இஞ்சிச் சாறையும் காய்ச்சிக் கலந்து வெல்லம், நெய், திப்பிலி பொடி ஆகியவற்றைச் சேர்த்து உட்கொண்டால் கர்ப்பிணிகளுக்கு வரும் வயிற்று, இடுப்பு நோய்கள் நீங்கும்.
* இஞ்சியைத் துவையல் செய்து சாதத்தில் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் இருக்காது.
* இஞ்சியைப் பச்சடி செய்து உணவுடன், கலந்து சாப்பிட வயிற்றுவலி, கபம், களைப்பு நீங்கும்.
* இஞ்சியைச் சிறு துண்டுகளாக நறுக்கி உப்பில் தோய்த்துத் தின்றால், பித்தத்தாலும் கபத்தாலும் தோன்றும் நோய்கள் வருவதில்லை.
- நெ. இராமன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.