முதியோர் நலம்

உங்கள் ஆயுளைக் குறைத்துவிடும் ஆபத்து இதற்குண்டு!

IANS

உடல் பருமன், புகைபிடித்தல் போன்றே ஆபத்தானது தனிமை என்கிறது அண்மையில் நடந்த ஒரு ஆய்வின் முடிவு.

புகைபிடித்தல் மற்றும் உடல் பருமனை விட நீண்ட ஆயுளைக் குறைப்பதில் தனிமையின் தாக்கம் போட்டியிடுகிறது.  அதிலும் குறிப்பாக இது வயதானவர்களுக்கு பொருந்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

வயதானவர்கள் அதிகளவில் முதியோர் ஆசிரமங்களுக்குச் செல்வதால் தனிமைகுள்ளாகின்றனர். சூழல்களின் காரணமாக தனிமையாக உணரும் முதியோர்களுக்கு இடையேயான பொதுவான பண்புகளை அடையாளம் காண கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் சான் டியாகோ ஸ்கூல் ஆஃப் மெடிசின் ஆராய்ச்சியாளர்கள் முயன்றனர்.

'ஏஜிங் அண்ட் மெண்டல் ஹெல்த்' எனும் இதழில் வெளியிடப்பட்ட அந்தப் புதிய ஆய்வில், தனிமையுடன் வாழும் மக்களின் அனுபவங்களை பதிவு செய்தது. தனிமை ஒரு நோயைப் போன்று மனிதர்களின் தனிப்பட்ட மற்றும் பொது வாழ்க்கையை பாதிக்கச் செய்கிறது, அதனால் ஏற்படும் மன அழுத்தத்தால் ஆயுள் குறையக்கூடும் என்பதைக் கண்டறிந்துள்ளது.

வயது தொடர்பான இழப்புகள் மற்றும் போதிய சமூகத் திறன்கள் இல்லாமல் தனித்திருப்பதன் முக்கிய காரணிகளாக கருதப்பட்டன.

"சிலர் தங்களது வாழ்க்கைத் துணை, உடன்பிறந்தோர் மற்றும் நண்பர்களை இழப்பதுதான் தங்களின் தனிமையின் காரணம் என்றனர். மேலும் சிலர் மறைந்த தங்களது நட்புக்களை ஒருபோதும் புதிய நண்பர்கள் மாற்றாக முடியாது என்று குறிப்பிட்டுள்ளனர்" என்று ஆராய்ச்சியாளர் அலெஜந்திர பரேடஸ் கூறினார். இவர் கலிபோர்னியா பல்கலைக்கழக சான் டியாகோ ஸ்கூல் ஆஃப் மெடிசினில் உளவியல் பேராசிரியர் ஆவார்.

தனிமை உணர்வு வாழ்க்கையில் நோக்கமின்மையுடன் அதிகம் தொடர்புடையது. மேலும் இரக்கம், ஞானம், வயதானதை ஏற்றுக் கொள்வது போன்றவற்றால் தனிமை உணர்வை வெல்ல முடியும் என்பதையும் ஆராய்ச்சி குழு கண்டறிந்தது.

இந்த முடிவுக்கு வர, ஆராய்ச்சியாளர்கள் 67-92 வயதுடைய 30 முதியவர்களின் தனிப்பட்ட நேர்காணல்களை நடத்தினர், இது சான் டியாகோவில் உள்ள, சுயாதீனமான வாழ்க்கை முறையில் வாழும் 100 வயதான பெரியவர்களின் உடல், மனம் மற்றும் அறிவாற்றல் செயல்பாடுகளை மதிப்பீடு செய்யும் ஒட்டுமொத்த ஆய்வின் ஒரு பகுதியாகும்.

"தனிமையின் அடிப்படைக் காரணங்களை மூத்தவர்களின் கண்ணோட்டத்தில் நாம் கண்டறிவது முக்கியம், எனவே அதைத் தீர்க்கவும், வயதானவர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியம், நல்வாழ்வு மற்றும் ஆயுளை மேம்படுத்தவும் உதவ முடியும்" என்று கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் சான் டியாகோ ஸ்கூல் ஆஃப் மெடிசினில் மூத்த உளவியல் பேராசிரியரான திலீப் வி. ஜெஸ்டே கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

SCROLL FOR NEXT