செய்திகள்

ஓடுங்கள்! ஆடுங்கள்! மன அழுத்தம் குறையும்!

IANS

ஏரோபிக்ஸ் தொடர்ந்து செய்வதால் மனநலம் மற்றும் மூளைத் தொகுதியின் அளவு அதிகரிக்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

லேசான மனநல குறைபாடுகள் உள்ளவர்கள் சில ஏரோபிக் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்வதன் மூலம் நல்லதொரு மாற்றத்தைக் காண்பார்கள். வேகமான சுறுசுறுப்பான நடை, ஓட்டம், ஜாகிங் அல்லது நீச்சல் பயிற்சி போன்றவற்றை வாரத்தில் நான்கு முறை கடைப்பிடித்தார்கள் எனில் அவர்களின் மூளைத் தொகுதி அதிகரிக்கும், அதனால் அவர்களின் செயல்திறனும் மேம்படும். நினைவாற்றல் திறன், சிந்திக்கும் திறன், அல்ஜீமர், டிமென்ஷியா போன்ற பாதிப்புள்ளவர்கள் நிச்சயம் ஏரோபிக்ஸ் பயிற்சிகளை செய்ய வேண்டும். அது அவர்களுக்கு கவனிக்கத்தகுந்த வகையில் நல்ல மாற்றங்களை தரும் என்கிறது அந்த ஆய்வு.  

மற்றவகை உடற்பயிற்சிகளை செய்வது நல்லதுதான், ஆனால் ஏரோபிக் பயிற்சி அதைவிட பலன்களை அதிகமாகத் தரக்கூடியது என்கிறது இந்த ஆராய்ச்சி. அதிலும் மந்தமாக இருப்பவர்களுக்கு இது அருமருந்தாக செயல்படும் எனலாம் என்கிறார் மெரிக்க வேக் ஃபாரஸ்ட் பல்கலைகழகப் பேராசிரியர் ஜீயாங்சுல் கிம்.

இந்த ஆய்வில் லேசன மனநல பாதிப்புடைய 35 நபர்கள் பங்கேற்றார்கள். முதலில் இரண்டு குழுக்களாக அவர்கள் பிரிக்கப்பட்டார்கள். ஆராய்ச்சியாளர்களின் பரிந்துரையின்படி, பதினாறு நபர்கள் கொண்ட (சுமார் 63 வயதினர்) ட்ரெட்மில். ஸ்டேஷன் பைக் போன்ற ஏரோபிக் பயிற்சிகளை ஆறு மாதங்களுக்கு (வாரத்துக்கு நான்கு நாட்கள் மட்டும்) தொடர்ந்து செய்து வந்தனர். இதே கால அளவில் மற்ற 19 நபர்களை (சுமார் 67 வயது) ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளை மட்டும் செய்யதனர்.

இந்த ஆய்வின் ஆரம்பத்தில் மற்றும் ஆறு மாதம் கழித்து அதன் முடிவில் இரண்டு முறை இரண்டு குழுவினருக்கும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்கப்பட்டது. ஏரோபிக் பயிற்சி செய்தவர்கள் மற்றும் ஸ்ட்ரெச்சிங் செய்தவர்கள் ஆகிய இரண்டு பகுதியினரின் மூளைத் தொகுதியும் கவனிக்கத்த அளவில் அதிகரித்திருந்தது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் எனில் சாம்பல் நிறப் பருப்பொருள் பகுதிக்கு   (Grey matter Regions) மற்றும் நெற்றிப் பொட்டு மடல்கள் (temporal lobe) ஆகியவற்றில் நல்ல முன்னேற்றேம் காணப்பட்டது. இது குறுகிய கால நினைவாற்றல் திறனுக்கு உதவும் மூளையின் பகுதிகளாகும். இதில் முக்கியமாக கருத வேண்டியது ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் செய்தவர்களை விட ஏரோபிக்ஸ் பயிற்சி செய்தவர்களின் மூளைத் தொகுதி அதிகமாக இருந்தது.

இந்த ஆய்வு சிகாகோவில் உள்ள ரேடியோலாஜிக்கல் சொசைட்டி ஆஃப் நார்த் அமெரிக்காவில் சமீபத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT