செய்திகள்

24 மணி நேர மருத்துவ உதவிக்கு '104': துண்டுப் பிரசுரம் வழங்கினார் ஆட்சியர்

தினமணி

24 மணி நேர மருத்துவ உதவிக்கு தமிழக அரசின் 104 மருத்துவ தொலைபேசி சேவையை பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) கே.முத்து திங்கள்கிழமை துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை சார்பில் மருத்துவம் தொடர்பான தகவல், ஆலோசனை மற்றும் புகார்களைத் தெரிவிக்க 24 மணி நேர 104 மருத்துவ தொலைபேசி அழைப்பை பொதுமக்கள் அறிந்து கொள்ள விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆட்சியர் கே.முத்து பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கி பேசியதாவது:
தமிழக முதல்வர் 2013-ஆம் ஆண்டு 104 மருத்துவ தொலைபேசி உதவி சேவையை தொடங்கி வைத்தார். 104 மருத்துவ தொலைபேசி உதவி சேவையை 24 மணி நேரமும் பொதுமக்கள் எந்தப் பகுதியிலிருந்தும் தொடர்பு கொண்டு பயன்படுத்திக் கொள்ளலாம்.
இச்சேவையை மருத்துவம் தொடர்பான தகவல்கள், ஆலோசனைகள் பெறுவதற்கும் மற்றும் அரசு மருத்துவமனைகள் பரிசோதனை வசதிகள், தாய் சேய் நல மையங்கள், ரத்த வங்கி, கண் தானம் மற்றும் கண் வங்கிகள், உறுப்பு தானம், விஷ
முறிவு சிகிச்சை மையங்கள் தொற்றும் மற்றும் தொற்றா நோய்கள் போன்ற பல்வேறு தகவல்களைப் பெறுவதற்கும் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும், நோய் அறிகுறி, அதற்கான உடனடி மருத்துவம், பரிசோதனைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பல்வேறு சிகிச்சை முறைகள் மருந்துகள் தொடர்பான விவரங்கள், மனநலம் குறித்த ஆலோசனைகள், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை தொடர்பான குறைகள் மற்றும் ஆலோசனைகள் பதிவு செய்யப்பட்டு, இதற்கென நியமிக்கப்பட்டுள்ள அரசு அலுவலர்களுக்கு தெரிவித்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சுகாதார சேவை வழங்குவதில் குறைகள் இருந்தால் அவற்றை சரி செய்யவும், 24 மணி நேரமும் இது தொடர்பான குறைகளைத் தீர்க்கவும் உடனடி உதவி செய்யப்படுகிறது என்றார்.
நிகழ்ச்சியின்போது, உதவி ஆட்சியர் (பயிற்சி) பவன்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் சந்தியா மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT