செய்திகள்

செங்கம் அரசு மருத்துவமனையில் போதை மறுவாழ்வு மையம்: அமைச்சர்

தினமணி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு மருத்துவமனையில் போதை மறுவாழ்வு மையம் அமைப்பதற்கான கருத்துரு பரிசீலனையில் உள்ளது என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.
செங்கம் சாலையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கூடுதல் வசதிகள் செய்யப்பட வேண்டும் என்று திமுக உறுப்பினர் எ.வ.வேலு சட்டப்பேரவையில் வியாழக்கிழமை கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
அதற்கு பதிலளித்து அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியது:
செங்கம் சாலையில் ஊரக நலப்பணிகள் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. தற்போது செங்கம் சாலையில் உள்ள பழைய அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் மற்றும் அவசர சிகிச்சை மையமும் செயல்பட்டு வருகிறது. மருத்துவக் கல்லூரியைச் சார்ந்த சில துறைகளும் பழைய மருத்துவமனை வளாகத்தில் புனரமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
மேலும் அதே மருத்துவமனையில் உள்ள 5 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள பழைய கட்டடங்களைப் பயன்படுத்தி அவற்றில் முதியோர் சிறப்பு சிகிச்சை மையம், போதை மறுவாழ்வு மையம், நகர்ப்புற மருத்துவ சேவை மையம் ஆகியவை அமைப்பதற்கானகருத்துரு பரிசீலனையில் உள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் தொண்டை வலி, இருமலுடன் காய்ச்சல்: சீசன் நோயாக மாறியதா கரோனா?

பாலியல் புகாரில் சிக்கியவர்கள் மீது நடவடிக்கை: எச்டி குமாரசாமி உறுதி

அஜித் படத்தில் சிம்ரன், மீனா?

மரத்தில் கார் மோதி விபத்து: தாயுடன் மகன் பலி

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

SCROLL FOR NEXT