செய்திகள்

குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப் பால் வங்கி தொடக்கம்

தினமணி

சென்னை நுங்கம்பாக்கம் காஞ்சி காமகோடி குழந்தைகள் அறக்கட்டளை மருத்துவமனையில் குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கான தாய்ப் பால் வங்கி தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை கிழக்கு ரோட்டரி சங்கம், அமெரிக்காவின் சான் ஆன்டோனியா ரோட்டரி சங்கம் சார்பில் சென்னை காஞ்சி காமகோடி குழந்தைகள் அறக்கட்டளை மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கான உபகரணங்களை நன்கொடையாக வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு சென்னை கிழக்கு ரோட்டரி சங்கத்தின் தலைவர் பி.எஸ்.புருஷோத்தமன் தலைமை வகித்தார். கனரா வங்கியின் தலைவர் டி.என். மனோகர் கலந்து கொண்டு மருத்துவ உபகரணங்களை வழங்கிப் பேசுகையில், 
''தனியார் அமைப்புகளின் இதுபோன்ற மனிதாபிமான செயல்கள் வரவேற்கத்தக்கவை. ஏழை மக்களுக்கு மருத்துவ உதவி தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்'' என்றார். 
இதைத் தொடர்ந்து, காஞ்சி காமகோடி குழந்தைகள் அறக்கட்டளை மருத்துவமனைக்கு அவர் ரூ. 1 லட்சம் வழங்கினார்.
இந்த விழாவில், ரூ. 40 லட்சம் மதிப்பில் குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கான தாய்ப் பால் சேமிப்பு வங்கி, பச்சிளம் குழந்தையின் மூளை செயல் திறனை அறியும் கருவி, மூளையின் ரத்த ஓட்டத்தைக் கண்காணிக்கும் கருவி ஆகியவை வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவின் தலைவர் டாக்டர் ராகுல் யாதவ், காஞ்சி காமகோடி குழந்தைகள் அறக்கட்டளை மருத்துவமனையின் தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் சந்திரமோகன், மருத்துவ இயக்குநர் டாக்டர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

அரசுப் பேருந்துகளில் சோதனை நிறைவு

ஆசிரியா்களுக்கு 30 நாள்களில் ஓய்வூதிய பலன்: கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT