செய்திகள்

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சர்க்கரை நோய் சிகிச்சைக்கு விரைவில் தனிப் பிரிவு

தினமணி

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ரூ. 7 கோடியில் சர்க்கரை நோய் சிகிச்சைக்காக தனிப் பிரிவு அமைக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக சர்க்கரை நோய் தடுப்பு விழிப்புணர்வு தினம் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கலந்துகொண்டு 15 பேருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கண்டறியும் கருவி வழங்கி, மரக்கன்றுகளை நட்டு வைத்துப் பேசியதாவது:
இந்தியாவில் 6.9 கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 2040-இல் 10.9 கோடியாக உயர வாய்ப்புள்ளது. தமிழகத்தில் சர்க்கரை நோய் வர வாய்ப்புள்ள நிலையில் 70 லட்சம் பேர் உள்ளனர்.
இந்தியாவிலேயே சென்னை அரசு பொது மருத்துவமனையில்தான் 1979-இல் 30 படுக்கை வசதிகளுடன் சர்க்கரை நோய்க்கான சிறப்புப் பிரிவு தொடங்கப்பட்டது. இதில், தற்போது, 800 பேர் வெளி நோயாளிகளாகவும், 30 பேர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட 1,400 பேருக்கு மாதந்தோறும் இன்சுலின் ஊசி மருந்து இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
சென்னை மருத்துவக் கல்லூரியில் சர்க்கரை நோய் குறித்த இரண்டு ஆண்டு பட்டய மேற்படிப்பு கற்பிக்கப்படுகிறது. இதில், ஆண்டுக்கு மூவர் என இதுவரை 75-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பட்டயம் பெற்றுள்ளனர். சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ரூ. 7 கோடி மதிப்பில் 3 மாடிகள் கொண்ட சர்க்கரை நோய் சிகிச்சைக்காக தனித் துறை அமைப்பட்டு வருகிறது. இது விரைவில் திறக்கப்படும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எட்வின் ஜோ, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் சாந்தாராம், சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் நாராயணபாபு, துணை முதல்வர் டாக்டர் சுதா சேஷய்யன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப நோய்களுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

கோட் நாயகி மீனாட்சி செளத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT