செய்திகள்

தலைமுடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளர சூப்பர் டிப்ஸ்

கோவை பாலா

காய் : கொத்தவரங்காய் + எலுமிச்சம் பழத்தோல் 

சத்துக்கள் : இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி, சி நிறைந்துள்ளது.

தீர்வு : கொத்தவரங்காயை பொடியாக நறுக்கி காய வைத்தது (500 கிராம்), எலுமிச்சம் பழத்தோல் (100 கிராம்), கறிவேப்பிலை (300 கிராம்), கரிசலாங்கண்ணிக் கீரை (300 கிராம்) இவை நான்கையும் எடுத்து உலர்த்திப் பொடி செய்து வைத்துக் கொண்டு தினமும் காலை மாலை என இருவேளையும் ஐந்து கிராம் அளவுக்குச் சுடுநீரில் கலந்து  சாப்பிட்டு வந்தால் தலைமுடி கருமையாகவும் அடர்த்தியாகவும் வளரும்.

சோற்றுக் கற்றாழை ஜெல்லுடன் சம அளவு கறிவேப்பிலை சேர்த்து அரைத்து விழுதாக்கி தலைக்கு நன்றாக தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து குளிக்கவும். இவ்வாறு வாரம் ஒருமுறை இதுபோல செய்தால் முடகயின்  வளர்ச்சி தூண்டப்பட்டு கருமையாக முடி வளரும். 

வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் இரவு படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT