செய்திகள்

இளநரை மறைந்து முடி பளபளப்பாகவும் கருமையாகவும் வளர

கோவை பாலா

காய் : பீர்க்கங்காய்

சத்துக்கள் : நார்ச்சத்து, ‘ஏ’, ‘பி’, ‘சி’ வைட்டமின்கள், தாது உப்புகள் உள்ளன.

தீர்வு : பீர்க்கங்காயைச் சிறுசிறு துண்டுகளாக்கி வெயிலில் வைத்து நன்றாக உலர்ந்த பின் இடித்துப் பொடி செய்து வைத்துக் கொண்டு இரவு சாதம் வடித்த கஞ்சியை வைத்திருந்து காலையில் அதனோடு பீர்க்கங்காய் பொடியைக் கலந்து குழைத்து தலைமுடிக்குத் தேய்த்து 15 அல்லது 20 நிமிடங்கள் கழித்து தலைக்குக் குளித்து வருவதால் இளநரை என்பது- தடை செய்யப்படுவதோடு தலைமுடி மென்மையாகவும் பளபளப்பாகவும் விளங்கும். 

சீரகத்தை கரும்புச்சாற்றில் ஊறவைத்து , காயவைத்து பொடி செய்து தினமும் அதிகாலையில் அரை ஸ்பூன் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் , பித்தம் குறையும் , இளநரை மறையும்.

வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் இரவு படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT