செய்திகள்

உடல் சோர்வு ஏன் ஏற்படுகிறது? சுறுசுறுப்பாக ஒரு எளிய வழி!

கோவை பாலா

அறிகுறிகள் : ரத்த ஒட்டம் சரியில்லாத காரணத்தினால் மூளை மற்றும் உடலில் உள்ள செல்கள் சோர்ந்து விடுவதால் நரம்பு மண்டலம் பலவீனமடைந்து  உடல் சோர்வு அடிக்கடி உண்டாகும்.

மண்டலம் - ரத்த ஒட்ட மண்டலம்
காய் - வாழைக்காய்
பஞ்சபூதம் - நீர்
மாதம் - பங்குனி
குணம் - நற்குணங்கள் கிரகிப்பு
ராசி /லக்கினம் - மீனம் 

சத்துக்கள் : சோடியம், கார்போஹைட்ரேட் நார்ச்சத்து, சர்க்கரை, புரதம் வைட்டமின் (ஏ, பி6, சி, இ, கே)

தீர்வு : வாழைக்காய் (சிறியது), வெண்பூசணிக்காய் தோலுடன் (100 கிராம்), வெற்றிலை (2), புதினா (சிறிதளவு), மிளகு (2) இவை அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கி அதனுடன் சிறிதளவு உப்பு (தேவைப்பட்டால்) சேர்த்துக் கொண்டு ஒரு வேளை உணவாக குடித்து வரவும். தினமும் மதிய உணவில் வாழைப்பூ, வாழைத்தண்டு ஆகியவற்றை நீராவியில் வேக வைத்து பொறியலாக அதிகம் எடுத்துக் கொள்ளவும்.

வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர்
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாதுகாப்புப் படையினருடன் மோதல்: சத்தீஸ்கரில் 3 பெண்கள் உள்பட 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தேர்தல் நேரத்தில் கேஜரிவால் கைது ஏன்?: அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

இன்றுமுதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கட்டணம்

வட தமிழக உள் மாவட்டங்களில் 3 நாள்கள் வெப்ப அலை வீசும்

ஆவடியில் ரௌடிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும்

SCROLL FOR NEXT