செய்திகள்

உள்ளங்கால் , உள்ளங்கை , தலை ஆகிய இடங்களில் உண்டாகும் அரிப்பு மற்றும் துர்நாற்றம்  நீங்க

கோவை பாலா

சத்துக்கள் : வைட்டமின் B, C, கால்சியம், பொட்டாசியம், இரும்புச் சத்து, பாஸ்பரஸ்  மற்றும் நார்ச்சத்து

தீர்வு : வெண் பூசணிக்காய் (250 கிராம் தோல், விதையுடன்), கோவக்காய் (5), புதினா (சிறிதளவு)   அதனுடன்  வெற்றிலை (2) , கொத்தமல்லி (சிறிதளவு), மிளகு (2), இவை அனைத்தையும்  மிக்ஸியில் போட்டு தண்ணீர் அல்லது மோர் ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கி வடிகட்டி வைத்துக்கொண்டு  காலையில் இருந்து மதியம் வரை கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வரவும். தீர்ந்தவுடன் மறுபடியும் ஜூஸாக்கி குடிக்கவும்.  தொடர்ந்து  குறைந்தபட்சம் 21 நாட்களாகவது குடித்து வரவும்.

(தேவைப்பட்டால் சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்துக்கொள்ளவும்.)

பீட்ரூட் சாறு சிறிதளவு எடுத்து அதனுடன் சிறிது படிகாரத்தைப் பொடியாக்கி இரண்டையும் கலந்து அரிப்புள்ள இடத்தில் தடவினால் தோலில் உண்டாகக்கூடிய தாங்க முடியாத அளவு அரிப்பு உடனே  அடங்கிவிடும்.

வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT