செய்திகள்

இளம் வயதில் தோலில் சுருக்கம் உண்டாகி வயோதிக தன்மையாவதை தடுக்க

கோவை பாலா


சத்துக்கள் : எலுமிச்சை பழத்தின் தோலில் வைட்டமின் A, E, C, B6, ரிபோப்லாவின், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் ஏராளமாக உள்ளது.

தீர்வு : எலுமிச்சை பழத்தோலுடன் (1) ஒரு பிஞ்சு வாழைக்காய் (சிறியது) அல்லது வாழைப்பூ (100 கிராம்) இவை இரண்டையும் நறுக்கி மிக்ஸியில் போட்டு அதனுடன் சிறிது மிளகு , மஞ்சள்தூள் சேர்த்து  நிறைய தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கி வைத்துக் கொண்டு தேவைப்பட்டால் சிறிதளவு உப்பு சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வரவும்.

எலுமிச்சை பழத் தோலை காயவைத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு அதனை சிறிதளவு எடுத்து அததனுடன் தேன், நாட்டுசர்க்கரை மற்றும் சிறிது விளக்கெண்ணை சேர்த்து, பசையாக்கி,  தோல் சுருக்கம் உள்ள பகுதியில்  தடவி பின்னர், குளிர்நீரில் அலசிவரவும்.

பலாப்பழத்தின் விதையை பாலில் சிறிது நேரம் ஊற வைத்து, பின் அதனை அரைத்து சுருக்கம் உள்ள இடத்தில் வந்தால் ஆறே வாரங்களில் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மறையும்.

வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் இரவு படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

127 ஆண்டுகால கோட்டை.. இரண்டாக உடையும் கோத்ரேஜ் குழுமம்

கோவிஷீல்டு பக்கவிளைவுகளை ஆய்வு செய்ய எய்ம்ஸ் மருத்துவக் குழு -உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

கருமுட்டையைப் பாதுகாத்து வைத்த பிரபல நடிகை!

கடனை செலுத்திவிட்டு மனைவியை அழைத்துச் செல்: தனியார் வங்கி அட்டூழியம்

உலகக் கோப்பையில் வேறு மாதிரி விளையாடுவார்: ஹார்திக் பாண்டியாவுக்கு ஆதரவளித்த கவாஸ்கர்!

SCROLL FOR NEXT