செய்திகள்

மூலம் குணமாக வேண்டுமா? இதை முயற்சித்துப் பாருங்கள்!

வைட்டமின் B , C , கால்சியம் , பொட்டாசியம்  , இரும்புச் சத்து  , பாஸ்பரஸ்  மற்றும் நார்ச்சத்து

கோவை பாலா

சத்துக்கள் : வைட்டமின் B, C, கால்சியம், பொட்டாசியம் , இரும்புச் சத்து, பாஸ்பரஸ்  மற்றும் நார்ச்சத்து

தீர்வு : வெண்பூசணிக்காய் தோலுடன் (200 கிராம்), கோவைக்காய் (10) சின்ன வெங்காயம் (5), சீரகம் ஒரு ஸ்பூன், சோம்பு ஒரு ஸ்பூன் மணத்தக்காளி கீரை (1 கைப்பிடி), கொத்தமல்லி இலை (சிறிதளவு) கறிவேப்பிலை (சிறிதளவு) எடுத்துக் கொள்ளவும்.

முதலில் வெண் பூசணிக்காய் மற்றும் கோவைக்காய் இரண்டையும் நீராவியில் வேகவைத்து அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனோடு மற்ற பொருட்களையும் அனைத்தையும் சேர்த்து  சூப்பாக  தயார் செய்து அதனை ஒரு  நாளைக்கு மூன்று வேளை என குடித்து வரவும். 

மஞ்சள் தூள் இரண்டு சிட்டிகை எடுத்து  10 கிராம் வெண்ணெய்யில் கலந்து ஆசன வாயில் வைத்து அழுத்தி வந்தால் எத்தகைய உள்மூலமும் வெளி மூலமும் குணமாகும்.

வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் இரவு படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT