செய்திகள்

சிறுநீரை கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பது!

சோடியம் ,கார்போஹைட்ரேட் நார்ச்சத்து, சர்க்கரை, புரதம் வைட்டமின் (ஏ,  பி6, சி,  இ, கே )

கோவை பாலா

சிறுநீரை கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பது மற்றும் சிறுநீர் முற்றிலும் வெளியேற முடியாமல் தங்கி விடுதல் குறைபாடு நீங்க 

சத்துக்கள் : சோடியம் ,கார்போஹைட்ரேட் நார்ச்சத்து, சர்க்கரை, புரதம் வைட்டமின் (ஏ,  பி6, சி,  இ, கே )

தீர்வு : வாழைப்பூ (இரண்டு அல்லது மூன்று இதழ்களை நீக்கி விட்டு பூவை சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக் கொண்டு (100 கிராம்) அதனுடன் பீர்க்கங்காய் (150 கிராம் தோலுடன்), முருங்கை விதை (10) இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு  தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கி வடிகட்டி வைத்துக் கொண்டு நாள் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வரவும்.

வாழைக்காய் மற்றும் வாழைப் பூவை தேவையான அளவு எடுத்து நீராவியில் வேகவைத்து  பொறியல் செய்து மதிய வேளை உணவில் அதிகமாக வைத்து சாப்பிட்டு வரவும்.

வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT