செய்திகள்

சர்க்கரை நோயாளிகளுக்கு  ஏற்ற உணவாக விளங்கும்  உன்னதமானக் கஞ்சி

கோவை பாலா


 
குதிரைவாலி கோவக்காய் கஞ்சி
 
தேவையான பொருட்கள்

 
குதிரை வாலி  -  100  கிராம்
கொள்ளு -  50  கிராம்
கோவக்காய் - 10
உப்பு - தேவையான அளவு

செய்முறை

  • முதலில் கொள்ளை  வெறுமையாக வறுத்து நீரில் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.
  • கோவக்காயை நறுக்கி நீராவியில் வேகவைத்து அரைத்து ஜூஸாக்கிக் கொள்ளவும்.
  • பின்பு ஒரு பாத்திரத்தில் 600 மி.லி அளவு தண்ணீர் ஊற்றி அதில் குதிரைவாலி மற்றும் ஊறவைத்த கொள்ளுவை சேர்த்து நன்கு வேகவைக்கவும்.
  • நன்கு வெந்தவுடன் ஜூஸாக்கி வைத்துள்ள கோவக்காயை சேர்த்து கலக்கி குழைய வேக வைத்து இறக்கவும்.
  • பின்பு நன்கு குழைந்த அரிசிக் கஞ்சியை கடைந்து தேவையான அளவு உப்பு சேர்த்து பருகவும்.

பயன்கள்

  • உடம்பில் அதிகப் படியான தேவையற்ற கொழுப்பு உள்ளவர்களுக்கு இந்தக் கஞ்சி ஒரு வரப்பிரசாதம். தினமும் ஒரு வேளை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
  • சர்க்கரை நோயாளிகள் தினமும் ஒரு வேளை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
Cell : 96557 58609, 73737 10080
Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

கரம்பக்காடு முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்

பாரமுல்லாவில் 35 ஆண்டுகளில் இல்லாத வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT