காய் : கோவக்காய் + காரட் பச்சடி
சத்துக்கள் : வைட்டமின் ஏ, கால்சியம், போலிக் அமிலம், பாஸ்பரஸ், இரும்புச் சத்துக்கள் நிறைந்துள்ளன
தீர்வு
கோவக்காய் (50 கிராம்)
கேரட் (50 கிராம்) ,பீட்ரூட் (25 கிராம்)
முள்ளங்கி (25 கிராம்), மிளகுத் தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள் மூன்றும் (தேவையான அளவு)
மல்லித் தழை, கறிவேப்பிலை மற்றும் புதினா மூன்றும் சேர்த்து (1 கைப்பிடி)
பூண்டு (2)
பெருங்காயம் (சிறிதளவு)
எலுமிச்சம் பழச்சாறு தோலோடு(1)
செய்முறை : முதலில் கோவக்காய், முள்ளங்கி, கேரட், பீடரூட் ஆகியவற்றை நன்றாக கழுவி சிறியதாக நறுக்கி அதனுடன் மிளகுத் தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை கலந்து கறிவேப்பிலை, புதினா, மல்லித்தழை, பூண்டு ஆகியவற்றை சிறிதாக நறுக்கி அனைத்தையும் ஒன்றாக கலந்து அவற்றில் எலுமிச்சம் பழச் சாறு ஊற்றி பெருங்காயத் தூளையும் சேர்த்து நன்றாக பிசைந்து வைத்துக் கொண்டு தினமும் ஒரு வேளை உணவாக இதனை சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வு நீங்கி நோய் எதிர்ப்புத் திறன் அதிகரித்து உடல் ஆரோக்கியமாக திகழும்.
பச்சை பட்டாணியை தினசரி உணவில் சேர்த்து கொண்டு வரும் பொழுது இவற்றில் உள்ள இரும்புச் சத்து அதிகம் இருப்பதால் நம் உடலில் ரத்த அணுக்கள் உற்பத்தியை அதிகரித்து ரத்த சோகையை போக்கி உடல் சோர்வையும் நீக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது .
தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.