செய்திகள்

பசியைத் தூண்டி ஜீரண சக்தியை அதிகரிக்கவும், பலவிதமான நோய்களுக்கான அருமருந்து இது!

கோவை பாலா

கீரை :  கொத்தமல்லித் தழை சூப்

தேவையான பொருட்கள்

கொத்தமல்லி - 1 கட்டு , 
மிளகு , சீரகம் - தலா ஒரு ஸ்பூன்
தக்காளி   - 2
பூண்டு.  - 10 பல்
எலுமிச்சை பழம் - அரை  பழச் சாறு
நல்லெண்ணெய்  - 2 ஸ்பூன்
உப்பு   - தேவையான அளவு

செய்முறை : கொத்தமல்லிக் கீரையை அலசி, ஆய்ந்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

பூண்டு, மிளகு, தக்காளி ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு நல்லெண்ணெய் ஊற்றி வதக்கி அதனுடன் ஐந்து டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.ஒரு கொதி வந்தப் பிறகு உப்பு போட்டு, எலுமிச்சைச் சாறு பிழிந்து அதனுடன் நறுக்கிய கொத்தமல்லியைச் சேர்த்து மூடிவிடவும்.

மூன்று நிமிடம் கழித்து, சூப்பை அடுப்பில் இருந்து இறக்கிவிடவும் .

இந்த சூப்பை காலை வேளையில் செய்து சாப்பிட்டு வந்தால் நன்றாக பசியைத் தூண்டி ஜீரண சக்தியை  அதிகரிக்கச் செய்யும். மேலும் பல விதமான நோய்களுக்கு அருமருந்தாகவும் செயல் படும்.

தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

SCROLL FOR NEXT