முருங்கைக் காய் மந்திரம்!
முருங்கைக் கீரையில் நார்ச் சத்து, புரதச் சத்து, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் வைட்டமின்களும் மிக அதிக அளவில் உள்ளன.
உயர் ரத்த அழுத்தத்தை சீராக்கும் முருங்கைக் கீரை
முருங்கைக் கீரையில் நார்ச் சத்து, புரதச் சத்து, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் வைட்டமின்களும் மிக அதிக அளவில் உள்ளன.
முருங்கை இலையை (1 கைப்பிடி) அளவு எடுத்து, அதனை நன்றாக அரைத்துச் சாறு எடுத்து, அதனுடன் சிறிதளவு தேன், சிறிதளவு மிளகுத் தூள் இரண்டையும் சேர்த்து நன்றாகக் கலக்கி, காலை வேளையில் குடித்து வந்தால் ரத்த அழுத்தம் குறைந்து, இதயம் சீராக இயங்கும்.
Advertisement
Advertisement
தினந்தோறும் இரண்டு வெள்ளரிக்காய் சாப்பிட்டு வந்தால் அதிலுள்ள சுண்ணாம்புச் சத்து ரத்தக் குழாய்களைத் தளர்த்தி, உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு :
அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.
பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.