செய்திகள்

பித்தத்தினால் உண்டாகும் பல நோய்களுக்கு நிவாரணம் தரும் சூப்

DIN

புளியாரைக் கீரை சூப்

தேவையான பொருட்கள்

புளியாரைக் கீரை - ஒரு கட்டு
மிளகு - அரை ஸ்பூன்
சீரகம் - அரை ஸ்பூன்
பூண்டு - 6 பல்
இஞ்சி - ஒரு துண்டு
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
புதினா இலை - ஒரு கைப்பிடி
மஞ்சள், உப்பு, எண்ணெய்  - தேவையான அளவு

செய்முறை : முதலில் புளியாரைக் கீரையை பொடி செய்து சுத்தப்படுத்திக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு அவற்றில் மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள், ஆகியவற்றை தட்டிப் போட்டு கொத்தமல்லி தழை, புதினா ஆகியவற்றைச் சேர்த்து அனைத்தையும் வதக்கி பின்னர் அதனுடன் நறுக்கி கீரையையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்து உப்பு சேர்த்து இறக்கி கொள்ளவும்.

பயன்கள் : இந்த சூப் பித்தத்தை தணிக்கக் கூடியது. அதனால் உண்டாகும் பல நோய்களை குணப்படுத்தும் நிவாரணியாக இருக்கும். இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT