செய்திகள்

புளித்த ஏப்பம், நெஞ்செரிச்சல் நீங்கி சீரான ஜீரணம் உண்டாக உதவும் நெய்

முதலில் வாணலியில் ஒரு கரண்டி நெய் விட்டு அவற்றில் ஒமம், மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.

கோவை பாலா

 
ஓமம் நெய் 

தேவையான பொருட்கள்

நெய்   - அரை கிலோ 
ஒமம்.  -  100 கிராம்
மஞ்சள்  - அரை ஸ்பூன்

செய்முறை : முதலில் வாணலியில் ஒரு கரண்டி நெய் விட்டு அவற்றில் ஒமம், மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து வறுத்துக் கொள்ளவும். பின்பு நெய்யையும், ஒமத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும். சிறு தீயில் நெய் நன்கு உருகிய பின் ஓமம் நெய்யின் மேல் மிதக்கும் சமயத்தில் இறக்கி விடவும். பின்பு அதனை வடிகட்டி வைத்துக் கொண்டு  சமையலில் பயன்படுத்தும் எண்ணெய்க்கு பதிலாக சேர்த்து வந்தால் குடற்பூச்சிகள், நாடாப் புழு உடலை விட்டு வெளியேறும். உடல் பலவீனம் மறையும். இந்த நெய்யை தோசைக்கு வார்த்துச் சாப்பிட்டு வந்தால் நன்கு ஜீரண சக்தியையும் அதிகரிக்கும். புளிச்ச ஏப்பம் மற்றும் நெஞ்செரிச்சல் உண்டாகாது.

பவளமல்லி இலைசாறு ஒரு ஸ்பூன் அளவுக்கு  எடுத்து  இதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சிறிது உப்பு சேர்த்து கலந்து வாரம் ஒருமுறை என 3 வாரம் இதை  குடித்து வந்தால் வயிற்று புழுக்கள் வெளியேறும். கீரி பூச்சிகள், நாடா புழுக்கள், நுண்கிருமிகளை வெளியேற்றும் அற்புதமான மருந்தாகிறது. வயிற்றை சுத்தப்படுத்தும் மூலிகையாக பயன்படுகிறது.

தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கர் வெள்ளம்: திருப்பத்தூர் குடும்பத்தினர் 4 பேர் பலி!

மோடியின் போர்! ரஷியா - உக்ரைன் போரில் இந்தியாவுக்கு தொடர்பு! - டிரம்ப் ஆலோசகர்

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு! 2 குழந்தைகள் பலி; 17 பேர் படுகாயம்!

தினம் தினம் திருநாளே!

திருவள்ளூரில் போதை மாத்திரைகள் விற்றதாக 5 போ் கைது

SCROLL FOR NEXT