செய்திகள்

குடிப்பதால் ஏற்படும் தொப்பைக் கரைய இது உதவும்

கோவை பாலா


கோவக்காய் வரகு அரிசி மோர்க் கஞ்சி

தேவையான பொருட்கள்

கோவக்காய் - 10
கொத்தவரங்காய் - 10
வரகரிசி - 100 கிராம்
பாசிப் பருப்பு - 50  கிராம்
ஓமம் - ஒரு ஸ்பூன்
மோர் - 200 மி.லி
சின்ன வெங்காயம் -  5
உப்பு - தேவையான அளவு

செய்முறை

  • முதலில் கோவக்காய் மற்றும் கொத்தவரங்காயை நீராவியில் வேக வைத்து மிக்ஸியில் போட்டு அரைத்து ஜூஸாக்கி வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
  • சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வரகரிசியை சுத்தம் செய்து கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த வரகரிசி மற்றும் பாசிப் பருப்பு ஆகியவற்றச் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைக்கவும்.
  • நன்கு வரகு அரிசி வெந்தவுடன் அனைத்தையும் சேர்த்து நன்கு மசித்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் ஓமம் மறாறும் சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கி அதில் மசித்து வைத்துள்ள வரகு அரிசி மசியலை சேர்த்து அதில் கோவக்காய் ஜூஸ், மோர் மற்றும் தேவையான அளவு உப்புச் சேர்த்து நன்கு கலக்கி ஒரு கொதிவிட்டு இறக்கி வைத்து கொள்ளவும்.

பயன்கள்

  • மது அருந்துபவர்களுக்கு உண்டாகும் உடல் பருமன்  குறைய இந்தக் கஞ்சியை ஒரு வேளை உணவாக  உட்கொள்ளலாம்.
  • மேலும் அவர்களுக்கு உண்டாகும் செரிமானக் குறைபாட்டை சீர் செய்யும் அற்புதமான கஞ்சி இந்த கோவக்காய் வரகு அரிசி மோர்க் கஞ்சி.

தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துணைவேந்தர்கள் நியமனம்.. ராகுல் காந்தி கருத்துக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு!

தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடு

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

இலங்கையில் திவ்ய பாரதி!

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

SCROLL FOR NEXT