உணவே மருந்து

என்ன சாப்பிடலாம்?

கல்லூரி மாணவியர் முதல் ஐடி நிறுவனங்களில் வேலை பார்க்கும் பெண்கள் முதல் அனைவரும் உச்சரிக்கும் வார்த்தை டயட்டிங்.

DIN

எப்போது சாப்பிட வேண்டும்? எப்படி சாப்பிட வேண்டும். என்ன சாப்பிட வேண்டும்?

இரண்டு மணி நேர இடைவெளியில் உடலுக்கு உணவு தேவை. சரியான நேரத்துக்கு உடலுக்குள் உணவு செல்லவில்லை என்றால் நம்முடைய மெட்டாபாலிக் சிஸ்டம் குழப்பம் அடைந்துவிடும். சரியான சமயத்தில் உணவு கிடைக்கவில்லை என்றால் உடல் அதிர்ச்சியாகும். வெறும் வயிற்றில் அமிலங்கள் சுரக்கத் தொடங்கி உடல் நலத்துக்குக் கெடுதல் ஏற்படும். உடலுக்குள் இருக்கும் பயாலாஜிகல் க்ளாக் மிக சரியாக செயல்படும். உண்ணும் நேரம் உறங்கும் நேரம், கழிப்பறைக்கு செல்லும் நேரம் என எல்லாவற்றையும் நாம் ஒருமுறை பதியச் செய்துவிட்டால் அது விடாப்பிடியாக அதையே பின்பற்றத் தொடங்கிவிடும். இயல்பாகவே அது நடக்கும். காரணமின்றி இஷ்டத்துக்கு தாறுமாறாக ஒவ்வொரு செயலையும் செய்து கொண்டிருந்தால் அதற்கான பிக்க விளைவு என்பது உடல் நோய் மற்றும் நிம்மதியின்மை (ரெஸ்ட்லெஸ்னெஸ்). நம் உடலுக்கும் இயக்கத்துக்கும் தேவையான விஷயஙக்ளைப் பின்பற்றுவதில் தவறில்லையே!

காலை உணவு

காலையில் எளிமையான உணவு எடுத்துக் கொண்டால் போதும். எழுந்ததும் காபி அல்லது டீ அல்லது வேறு எதாவது பானங்கள் (அ) லெமன் ஜூஸ் (அ) லஸ்சி 

சர்க்கரையில் & 99 சதவிகிதம் க்ளூகோஸ் 
ஜாகிரி & இது இயற்கையான உணவாகையில் நிறைய வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து உள்ளது.

மேற்சொன்ன உணவுகள் செரிமானம் ஆகத் தேவையில்லை. 

எந்த உணவை சாப்பிட்டாலும் நன்றாக சுவைத்து, மென்று தான் சாப்பிட வேண்டும். அதே போல் காபி அல்லது டீயை ரசித்துப் பருக வேண்டும். ஒவ்வொரு சொட்டாக நாவை நனைக்கச் செய்து அருந்த வேண்டும். கடகடவென்று கடனே என்று குடிக்கக் கூடாது. சாப்பாட்டையும் கோழி விழுங்குவது போல விழுங்கக் கூடாது. மூன்று விஷயஙக்ளை சாப்பிடும் போது நினைவில் வைத்திருக்க வேண்டும்

நம் வயிற்றில் மாவுச் சத்து செரிமானம் செய்ய எந்த என்சைமும் இல்லை. புரதத்தை செரிக்கும் என்சைம்கள் மட்டுமே உள்ளன என்பதை நாம் மறக்கக் கூடாது. எனவே முதலில் நாவுக்கு சுவையை உணரச் செய்து, பற்களால் நன்றாக கடித்து மென்று சவைத்து உணவை சலைவாவின் உதவியுடன் அதனை மேலும் கூழாக்கி அதன் பின்னரே விழுங்க வேண்டும். அப்போது தான் உள்ளே சென்ற உணவு நன்றாக செரிக்கும். சாப்பிட கட்டாயம் இருபது நிமிடம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இரண்டு மணி நேர இடைவெளிக்குப் பின் (காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணி வரை) 20 நிமிடம் சூரிய ஒளியில் உடல் படுமாறு இருக்க வேண்டும். இதிலிருந்து வைட்டமின் டி சத்து உடலுக்குச் சேர்ந்துவிடும்.

பலர் இதை தவிர்ப்பார்கள். காரணம் நிறம் கருப்பாகும். சருமப் பிரச்னைகள் வரும் என்று சொல்வார்கள். ஆனால் எல்லாவற்றுக்கும் மேல் வைட்டமின் டி தேவையை சமன் செய்ய சூரிய ஒளி அத்யாவசியம் என்பதை மறக்கக் கூடாது.

வெண்ணெய், நெய், பாலாடை, போன்றவற்றை தவிர்க்கச் சொல்வார்கள். ஆனால் அவற்றில் தான் வைட்டமின் டி அதிகம் உள்ளது. 

காளான் மற்றூம் அசைவ உணவில், முட்டையில் வைட்டமின் டி கிடைக்கும். ஆனால் சைவ உணவில் பால் பொருட்களில் மட்டுமே இது கிடைக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

சூப்பர் 8: இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு!

கோழிக்கோடு: சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் உணவகம் மீது தாக்குதல்

பெர்லின் திரைப்பட விழாவில் அசாம் பெண் இயக்கிய படத்துக்கு விருது!

SCROLL FOR NEXT