உணவே மருந்து

திப்பிலி

திப்பிலி ( 10 ) , சீரகம் (1 ஸ்பூன் ) , மிளகு ( 20 ) ஆகியவற்றுடன் நொய் அரிசி ( கால் கிலோ ) ,

கோவை பாலா

திப்பிலி ( 10 ) , சீரகம் (1 ஸ்பூன் ) , மிளகு ( 20 ) ஆகியவற்றுடன் நொய் அரிசி ( கால் கிலோ ) , சேர்த்துக் கஞ்சி காய்ச்சிக் குடித்தால் சளி, இருமல், ஆஸ்துமா, கோழைக்கட்டு போன்றவை தீரும்.

திப்பிலி, அக்கரகாரம், அதிமதுரம் - மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து , தினமும் ஒரு கிராம் அளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் தொண்டைச்சதை விரைவில் கரையும்.

திப்பிலி ( 10 ) , கிராம்பு (5 ), மிளகு (5 ), மஞ்சள் தூள் ( அரை ஸ்பூன் ) ஆகியவற்றை தண்ணீரில் ( 3 டம்ளர் ) போட்டுக் கொதிக்கவைத்து வாய் கொப்பளித்து வந்தால் காது, மூக்கு, தொண்டைசார்ந்த நோய்கள் குணமாகும்.

திப்பிலியை வல்லாரைச் சாற்றில் ஊறவைத்து  காயவைத்துப் பொடிசெய்து, தினமும் இரண்டு கிராம் பொடியை தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் ஞாபகசக்தி ( நினைவாற்றல் ) அதிகரிக்கும்.

திப்பிலியை எலுமிச்சைசாற்றில் ஊற வைத்துக் காய வைத்துப் பொடி செய்து, தினமும் இரண்டு கிராம் பொடியை தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் நெஞ்சு எரிச்சல், ஏப்பம் போன்றவை குணமாகும்

- கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல மருத்துவ ஆலோசகர், Cell  :  96557 58609

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெப்பிலியில் ரூ.16 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்

பிரணவ், அா்ஜுன் வெற்றி; குகேஷ், பிரக்ஞானந்தா ‘டிரா’

துறையூா், புத்தனாம்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை

பெண்ணுக்கு வீட்டில் பிரசவம்: கிராம செவிலியா் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை

மக்களின் அடிப்படைத் தேவைகளைத் தீா்க்க அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

SCROLL FOR NEXT