முகப்பு
உணவே மருந்து

இன்றைய மருத்துவ சிந்தனை - 20.11.2016 சுக்கு

சுக்குப் பொடியை தேனில் குழைத்து மூன்று வேளை உணவுக்கு முன் சாப்பிட்டால்

Updated On : 25 ஜனவரி, 2024 at 4:57 AM
பகிர்:

சுக்குப் பொடியை தேனில் குழைத்து மூன்று வேளை உணவுக்கு முன் சாப்பிட்டால் தொண்டைக்கட்டு குணமாகும்.

சுக்கைப் பொடி செய்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால் நாவறட்சி குணமாகும்.

தோல் நீக்கிய சுக்கை ( 2 கிராம் ) பசும்பாலில் (2 லிட்டர் ) போட்டுக் கொதிக்கவைத்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மூட்டு வலி , வாயுத் தொல்லை , உடல் அசதி போன்றவை குணமாகும்.

சுக்குத் துண்டை தோல்நீக்காமல் வாயில் போட்டு மென்றால் பல்வலி குறையும்.

சுக்கை அடிக்கடி கஷாயம் வைத்துக் குடித்தால் தலைவலி , தலைச்சுற்றல்  போன்றவை வராது.

சுக்கு ,  மிளகு , திப்பிலி , அதிமதரம் ஆகியவற்றை சம அளவு எடுத்து தூள் செய்து கஷாயமாக்கிக் குடித்தால் காய்ச்சல் ,  வாய்ப்புண் , மண்ணீரல் வீக்கம் , அஜீரணம் போன்றவை குணமாகும்.

சுக்குப் பொடியுடன் பூண்டுச் சாறு சேர்த்துச் சாப்பிட்டுவந்தால் கடுமையான வயிற்றுவலி  குணமாகும்.


- கோவை பாலா                                                                                                                                         
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot and Hand Reflexologist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

முழு கட்டுரையைப் படிக்க →