உணவே மருந்து

இன்றைய மருத்துவ சிந்தனை சோம்பு

தினமணி

சோம்பு, மிளகு, எள்ளு இவை மூன்றையும் சம அளவு எடுத்துப் பொடி செய்துகொள்ளவும். இதில் தினமும் காலையில் ஒரு ஸ்பூன் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் வெண்குஷ்டம் மறையும்.

சோம்பு, சாரணை வேர், பசலைக்கீரை இவை மூன்றையும் சம அளவு எடுத்து கஷாயம் காய்ச்சிக் குடித்துவந்தால் சிறுநீரகக் கற்கள் கரையும்.

சோம்பு, பார்லி, மஞ்சள் இவை மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து கஷாயம் காய்ச்சிக் குடித்துவந்தால் சிறுநீரக  சம்மந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

சோம்பு, கருஞ்சீரகம் இவை இரண்டையும் சம அளவு எடுத்து தயிர் சேர்த்து அரைத்து , தேமல் , படை , சிரங்கு உள்ள இடங்களில் பூசினால் அவை உடனே குணமாகும்.

சோம்பு, அதிமதுரம் இவை இரண்டையும் சம அளவு  எடுத்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் ஒற்றைத் தலைவலி குணமாகும்.

சோம்பு, அசோகப்பட்டை இவை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் கருப்பை சார்ந்த நோய்கள் குணமாகும்.

கருப்பை பலம்பெற

கருப்பை பாதிக்கப்பட்டால் கருத்தரிப்பு நடக்காது. இதனால் சிலர் குழந்தை பேறு இல்லாமல் கூட அவஸ்தைப் படுவார்கள். பெருஞ்சீரகத்தை இளம் வறுவலாக வறுத்து பொடித்து, வேளையொன்றுக்கு 2 கிராம் வீதம் தனியாகவோ அல்லது பனங்கற்கண்டு கலந்தோ சாப்பிட்டு வந்தால் கருப்பை சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் விலகும்.

ஈரல் பாதிப்பு நீங்க

உடலின் செயல்பாடுகள் அனைத்திற்கும் முக்கிய காரணியாக இருக்கும் உறுப்பு ஈரல்தான். ஈரல் பாதிக்கப்பட்டால் பித்தம் அதிகமாகி பல நோய்களுக்கு ஆளாக நேரிடும். ஈரல் நோயைக் குணப்படுத்த சோம்பும் ஒரு மருந்தாகப் பயன்படுகிறது.

சோம்பை இளம் வறுவலாக வறுத்து பொடிசெய்து அதனுடன் தேன் கலந்து காலை மாலை 1 டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் ஈரல் நோய் குணமாகும்

KOVAI  HERBAL CARE
கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot and Hand Reflexologist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹோட்டல் வருவாய் ரூ.50; ஆனால், ஊழியர்களுக்கு சம்பளம் ரூ.15 லட்சம்! கங்கனா ஆதங்கம்!

முதல்வராக்கிய சசிகலாவை சந்திக்க தைரியம் இருக்கிறதா? - பழனிசாமிக்கு தினகரன் சவால்!

அரசனாக மோகன் லால்! விருஷபா படத்தின் டீசர்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

கடைசி டி20: ஜிம்பாப்வேவை வீழ்த்தி நமீபியா ஆறுதல் வெற்றி!

SCROLL FOR NEXT