உணவே மருந்து

யோகப் பயிற்சிகளும் உணவும்

உங்கள் உடலே ஒரு சுமையாக நீங்கள் உணரும் போது, நீங்கள் மட்டுமல்ல, உங்கள்

DIN

உங்கள் உடலே ஒரு சுமையாக நீங்கள் உணரும் போது, நீங்கள் மட்டுமல்ல, உங்கள் வீடு அல்லது அலுவலகத்தில் இருப்பவர்களும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்படுகிறார்கள். நீங்கள் செல்லும் இடம் எல்லாம் உங்கள் உடல் பாதிப்பை வெவ்வேறு வகைகளில் வினியோகிப்பீர்கள். ஆனால் சரியான பயிற்சிகள் மற்றும் சரியான உணவு முறை மிகுந்த வித்தியாசத்தை ஏற்படுத்தும். உணவு உட்கொள்வதில் ஒரு வேளைக்கும் அடுத்த வேளைக்கும் போதுமான இடைவெளி இருக்க வேண்டும். அது மிகவும் முக்கியமானது. யோகாவைப் பொறுத்தவரை சரியான இடைவெளி 8 மணி நேரங்கள். எப்படியிருந்தாலும் 5 மணி நேர இடைவெளி ஒவ்வொருவருக்கும் நிச்சயம் தேவை. ஏனெனில் வயிறு காலியாக இருக்கும்போதுதான் உங்கள் ஜீரண உறுப்புகள் சரியாக செயல்படும்.

இதை ஒரு  பரிசோதனை மூலமாக பார்க்க முடியும். நீங்கள் ஒரு நாளைக்கு சாப்பிடும் உணவை இரண்டாகப் பிரித்து இரு வேளைகளில் சாப்பிட்டு வாருங்கள். சில நாட்கள் கழித்து அதே அளவு உணவை பத்தாகப் பிரித்து 10 வேளைகளில் சாப்பிடுங்கள். 10 வேளை சாப்பிடும் போது எப்போதும் வயிற்றில் ஏதோ இருப்பதால் ஜீரண சக்தி தடைப்பட்டு கழிவு வெளியேற்றம் சரியாக நடக்காமல் உங்கள் உடலில் எடை கூடியிருக்கும். வயிறு காலியாக இருக்கும்போதுதான் கழிவு வெளியேற்றம் நன்றாக நடக்கும். எனவே சாப்பிட்டது ஜீரணமாவதற்கான போதிய கால அவகாசம் கொடுத்த பிறகு அடுத்த வேளைச் சாப்பாட்டை சாப்பிடுவது நல்லது.

விரதம் போன்றவை இருப்பதெல்லாம் இந்தக் காரணத்தால் தான். எல்லா விலங்குகளுக்கும் இது தெரியும். சில நாட்களில் அவை அவர்கள் சில நாட்களில் சாப்பிட மறுப்பார்கள். ஆனால் பெரியவர்கள் அவர்களை அடித்து சாப்பிட வைப்பார்கள்.

உங்கள் உடலைக் கேளுங்கள்

உங்கள் உணவு என்று வரும்போது நீங்கள் யாரையும் கேட்காதீர்கள். உங்கள் உணவு பற்றி டாக்டர்களுக்கு எதுவும் தெரியாது. ஊட்டச்சத்து வல்லுனர்களுக்கு எதுவும் தெரியாது. உங்கள் யோகா ஆசிரியருக்கும் எதுவும் தெரியாது. உணவு என்று வரும்போது நீங்கள் உங்கள் உடலை மட்டுமே கேட்க வேண்டும். உங்கள் உடல் எதை விரும்புகிறதோ, எந்த உணவில் உங்கள் உடல் மகிழ்ச்சி அடைகிறதோ அந்த உணவை நீங்கள் சாப்பிடுங்கள். உணவு எப்போதும் உடல் பற்றியது. ஆனால் தற்போது நீங்கள் உங்கள் மனத்தின் திருப்திக்காக சாப்பிடுகிறீர்கள். மனதிற்கும் உணவுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. உடலைக் கவனிக்கப் பழகிக் கொண்டால் பிறகு எப்போதும் சரியான உணவையே உண்பீர்கள்.

உணவும் தூக்கமும்

உணவுக்கும் தூக்கத்துக்கும் குறைந்தபட்சம் 2 மணி நேர இடைவெளி இருக்க வேண்டும். சாப்பிட்ட உணவு செரிமானமாகி சக்தியாக மாற வளர்சிதை மாற்றம் அதிகமாக இருக்க வேண்டும். நீங்கள் விழித்திருக்கும் போதுதான் உங்களுக்கு வளர்சிதை மாற்றம் அதிகமாக இருக்கிறது. நீங்கள் தூங்க ஆரம்பித்துவிட்டால் உங்களுக்கு வளர்சிதை மாற்றம் மெதுவாக நடக்கிறது. எனவே சாப்பிட்டு 2 மணி நேரம் முன்னரே தூங்கச் ச்செல்லும் போது உங்கள் வளர்சிதை மாற்றம் குறைந்து நீங்கள் சாப்பிட்டது முழுமையாக சக்தியாக மாறாமல் கழிவாகவே வெளியேறும்.

பலர் நன்கு சாப்பிட்டால் தான் சரியாக தூங்க முடிகிறது என்று நினைத்து வயிற்றை நிரப்பிக் கொண்டு தங்களை மந்தமாக்கிக் கொண்டு உடனே தூங்கச் செல்கின்றனர். இந்த நிலையில் தான் உங்களுக்குத் தூக்கம் வருகிறது என்றால் இது நிச்சயமாக உங்கள் மனநிலை பற்றியதே, தூக்கம் பற்றியதல்ல.

ஆரோக்கியமாக வாழுங்கள்

உங்கள் உடலுக்கு பொருந்தும் உணவு மற்றும் சிறிது பயிற்சிகள் செய்து வந்தாலே உங்கள் உடல்நலத்தை நன்கு பராமரிக்க முடியும். அப்படியும் தேவைப்படின் இயற்கை மருத்துவம், யோகா போன்றவை உங்களுக்கு துணை செய்யும். ஆரோக்கியமான உடல் நலம் தான் ஒருவருக்கு மிகப்பெரிய சொத்து. உடல் ஆரோக்கியமாக இருக்கும்போது மனத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது எளிதாக இருக்கும்.

நன்றி : ஈஷா மையம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

இறுதிப் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா பேட்டிங்..! மகளிர் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்!

SCROLL FOR NEXT