உணவே மருந்து

இன்றைய மருத்துவ சிந்தனை: அந்திமல்லி

நமைச்சல் அடங்கு

தினமணி

உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!


அந்திமல்லி:

  • அந்திமல்லி இலையைய சிறிது ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி எடுத்து பழுக்காத கட்டிகளின் மீது சிறிது ஆமணக்கு எண்ணெய் தடவி வதக்கிய இலைகளை அதன் மீது பரவலாக ஒட்டி வைக்க கட்டிகள் விரைவில் உடைந்து சீழ் வெளியேறி சீக்கிரத்தில் குணமாகும்.
     
  • அந்திமல்லிக் கிழங்கை சுத்தம் செய்து நெய்விட்டு வதக்கி 10 முதல் 15 கிராம் அளவு வரை அன்றாடம் உண்டு வர உடல் பலம் பெறும்.
     
  • அந்திமல்லி சாறு எடுத்து இரண்டு தேக்கரண்டி அளவு சாற்றோடு போதிய தேன் கலந்து உள்ளுக்குக் குடிப்பதனால் பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல் மற்றும் அதனால் ஏற்படும் அரிப்பு, புண் ஆகியவை குணமாகும்.
     
  • அந்திமல்லி இலைகளை சேகரித்து மைய அரைத்து சாறு எடுத்து தோலில் தடிப்புடன் கூடிய நமைச்சல் ஏற்படும் போது மேலே பூசிவந்தால் நமைச்சல் அடங்குவதோடு சில்லென்று சுகமாய் இருக்கும்.
     
  • அந்திமல்லியின் வேர்ப் பகுதியைக் எடுத்து நன்றாகக் கழுவி சுத்திகரித்து அதன் மேல் தோலை சீவி நீக்கிவிட்டு கிழங்கு பகுதியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி மைய அரைத்து ஒரு நெல்லிக்காய் அளவு வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.
     

குறிப்பு :
அந்திமல்லிக்கு வேறுபெயர் – அந்திமந்தாரை , பத்தராஷி
ஆங்கிலப் பெயர் – FOUR “O “ CLOCK FLOWER
தாவரவியல் பெயர் – MIRABIBIS  
இது இந்தியாவில் தோட்டங்களில் அலங்காரமா இருக்க பயிரிடப்படுகிறது. இது மாலை, 3  மணிக்கு பிறகுதான் மலரும். இதன் பூ வெண்மை, மஞ்சள், செம்மை, கலப்பு நிறமுள்ளதாகவும் கண்கவரும் வகையிலும் இருக்கும்.


KOVAI  HERBAL CARE
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot and Hand Reflexologist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காரைக்குடி பகுதியில் நாளை மின்தடை

ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பெரியாா் பல்கலை.யில் சா்வதேச கருத்தரங்கு, வணிகக் கண்காட்சி

தொழில் கடன் பெறுவதற்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்

பழனி தைப்பூசத் திருவிழா: 892 இடங்களில் கண்காணிப்பு கேமரா

SCROLL FOR NEXT