உணவே மருந்து

இன்றைய மருத்துவ சிந்தனை: மாவிலங்கம்

தினமணி

உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!


மாவிலங்கம்:

  • மாவிலங்கம் இலையைத் தண்ணீரில் போட்டு அவித்து , அந்தத் தண்ணீரால் கை , கால்களைக் கழுவி வந்தால் வீக்கம் , வலி போன்றவை குணமாகும்.
  • மாவிலங்கப் பட்டையைப் பொடி செய்து சாப்பிட்டு வந்தால் மாதவிலக்குக் கோளாறுகள் , கர்ப்பப்பை கோளாறுகள் குணமாகும்.
  • மாவிலங்கப் பட்டையை இடித்து கஷாயம் வைத்துக் குடித்துவந்தால் வாயுத் தொல்லை மற்றும் அஜீரணக் கோளாறுகள் குணமாகும்.
     
  • முகவாதத்தை குணமாக்கும்
    -----------------------------
    குளிர்காலத்தில் பனிக்காற்று தாக்குவதினால் ஏராளமானோர் முகவாத நோயினால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு மாவிலங்கம் அருமருந்தாகும். மாவிலங்கு மரப்பட்டை ,மூக்கிரட்டைப் பட்டை வேர், வெள்ளைச் சாரணை வேர் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து நன்கு இடித்து முதல் நாள் இரவில் 250 மில்லி தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் அதை கொதிக்க வைக்க வேண்டும். 50 மில்லி அளவு வரும் வரை கொதிக்க வைத்து இறக்கி, ஆற வைத்து வடிகட்ட வேண்டும். இதனுடன் 60மில்லி கிராம் நண்டுகல் பற்பம்' சேர்க்க வேண்டும். தினமும் பல் துலக்கியதும், இதை அருந்தி வர இரண்டு, மூன்று மாதங்களில் நிரந்தர குணம் ஏற்படும்.

    மாவிலிங்கப்பட்டையை நன்றாக மைய அரைத்து அவற்றை நெல்லிக்காய் அளவு எடுத்து காலையில வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் தாமதமான மாதவிடாய் தடையில்லாம வரும்


குறிப்பு : 
இந்தியாவினைச் சார்ந்த இலையுதிர் மரம் மாவிலங்கமாகும். இது ஆற்றங்கரை ஓரங்களில் அதிகமாக காணப்படும். இந்த மரத்தின் இலைகள் மூன்று சிற்றிலைகளைக் கொண்ட கூட்டிலையாகும். மாவிலங்கத்தின் இலைகளும், பட்டையும் மருத்துவ பயன் கொண்டவை.


KOVAI  HERBAL CARE
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot and Hand Reflexologist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

மனைவியைக் கொலை செய்து கணவா் தற்கொலை முயற்சி

அகா்வால்ஸ் மருத்துவருக்கு சா்வதேச அங்கீகாரம்!

மேற்கு வங்கம்: குண்டுவெடிப்பில் பள்ளி மாணவா் உயிரிழப்பு

வட தமிழகத்தில் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT