உணவே மருந்து

இன்றைய மருத்துவ சிந்தனை: ஆகாயத் தாமரை

தினமணி


உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!

ஆகாயத் தாமரை:

  • ஆகாயத்தாமரை இலையைச் சுட்டுச் சாம்பலாக்கி தேமல் மற்றும் தழும்புகளில் பூசிவந்தால் அவை விரைவில் மறைந்துவிடும்.
     
  • ஆகாயத்தாமரை இலையுடன் வினிகர் சேர்த்து வேகவைத்து சாற்றைப் பிழிந்து எடுத்துவிட்டு , சக்கையை மட்டும் அழுகிய புண்களில் வைத்துக் கட்டிவந்தால் ஆறாத புண்ணும் ஆறிவிடும்.
     
  • ஆகாயத்தாமரை இலையை அரைத்து வெளிமூலம், மூலக்கட்டி(பெளத்திரம்)  ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அந்த இடத்தில் வைத்துக் கட்டிவந்தால் அவை விரைவில் குணமாகும்.
     
  • ஆகாயத்தாமரை இலைச்சாறு 100 மி.லி எடுத்துக்கொண்டு ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து நீர்விட்டு, கொதிக்கவைக்க வேண்டும். இதைக் குடித்துவந்தால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவதுடன் சிறுநீர்த்தாரையில் ஏற்படும் நோய்த்தொற்றும் குணமாகும்.
     
  • ஆகாயத்தாமரை இலையை அரைத்து, பசையாக்கிக்கொண்டு தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெயுடன் சேர்த்துக் காய்ச்சி, வடிகட்டி தோல் நோய்களுக்கு மேல் பூச்சாக பூசினால் பலன் கிடைக்கும். மேலும், இதை வெளிமூலம், கொப்புளம், தோல் அரிப்பு, தடிப்பு, கட்டிகள், சொறி சிரங்கு போன்ற பாதிப்புகளுக்குப் பூசுவதன் மூலம் நிவாரணம் கிடைக்கும்.
     
  • ஆகாயத்தாமரை இலையைச் சுத்தமாகக் கழுவி, சாறு பிழிந்து 20 மி.லி அளவு எடுத்து, அதில் இரண்டு டீஸ்பூன் வெங்காயச் சாறு சேர்த்து காலை, மாலை எனக் குடித்துவந்தால், சொட்டு மூத்திரம், நீர்க்கடுப்பு போன்றவை கட்டுப்படும்.


ஆகாயத்தாமரையில் இருந்து எரிவாயு தயாரிக்கும் முயற்சி நடைபெற்றுவருகிறது. மேலும், இது அதிக நார்த்தன்மைகொண்ட தண்டுப்பகுதிகளைக்கொண்டிருப்பதால் இயற்கை உரம் தயாரிக்கலாம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


KOVAI  HERBAL CARE
கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot and Hand Reflexologist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தோ்வில் சரஸ்வதி வித்யாலயா 97 சதவீதம் தோ்ச்சி

பிளாஸ்டிக் பொறியியலில் டிப்ளமோ படிப்புகள்: மாணவா் சோ்கை தொடக்கம்

நியூ பிரின்ஸ் பள்ளி 100% தோ்ச்சி

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: கல்லூரி மாணவா் பலத்த காயம்

மக்கள் கூடும் இடங்களில் அதிக கண்காணிப்பு கேமராக்கள்: வேலூா் மாவட்ட எஸ்.பி. உத்தரவு

SCROLL FOR NEXT