முகப்பு
உணவே மருந்து

இன்றைய மருத்துவ சிந்தனை ஆவாரம்

ஆவாரம் பூ, பச்சைப்பயிறு  இவை இரண்டையும் அரைத்து நமைச்சல் உள்ள இடத்தில் தேய்த்துக் குளித்து வந்தால் நமைச்சல்  குணமாகும்.

Updated On : 21 ஜூன் 2017, 5:47 pm IST
பகிர்:

ஆவாரம் பூ, பச்சைப்பயிறு  இவை இரண்டையும் அரைத்து நமைச்சல் உள்ள இடத்தில் தேய்த்துக் குளித்து வந்தால் நமைச்சல்  குணமாகும்.

ஆவாரம் பூ, ரோஜா மொட்டு, யானை நெருஞ்சில்  இவை மூன்றையும் ஒன்று சேர்த்துப் பொடியாக்கிச் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு குணமாகும்.

ஆவாரம் பூவை, துவரம் பருப்புடன் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.

Advertisement

Advertisement

ஆவாரம் பட்டை, சுக்கு  இவை இரண்டையும் சம அளவு எடுத்து தண்ணீரில் (200 மில்லி) போட்டுக் காய்ச்சி ஆறவைத்து தினமும் இருவேளையும் குடித்து வந்தால் கை கால் வீக்கம் குணமாகும்.

ஆவாரம் பிசினை காயவைத்துப் பொடி செய்து, தினமும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறையும், சர்க்கரை நோயும் கட்டுப்படும்.

ஆவாரம் விதையை எரித்துக் கரியாக்கிப் பொடி செய்து, கரிசாலைச் சாற்றில் கலந்து தலையில் தடவி வந்தால் இளநரை மறையும்.

ஆவாரம் பூ, நாவல் கொட்டை, சிறுகுறிஞ்சான் இவை மூன்றையும் சம அளவு எடுத்துப் பொடி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய், சிறுநீர் அடிக்கடி கழிதல் போன்றவை குணமாகும்.


KOVAI HERBAL CARE
கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  
Foot and Hand Reflexologist
Cell : 96557 58609

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.