இன்றைய செய்திகள் மே 23 - நேரலை!
முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள இணைந்திருங்கள்.
முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம்
சென்னையில் இன்று நடந்த திமுக இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்
காவிரியில் கர்நாடக அரசு மேக்கேதாட்டு அணை கட்டுவதைத் தடுக்க வலியுறுத்தி வரும் 29ஆம் தேதி தஞ்சையில் இடதுசாரிகள் சார்பில் ஆர்பபாட்டம் நடைபெற உள்ளது.
கோவை பாலியல் வன்கொடுமை: சிறுமியின் உடல் சொந்த ஊரில் தகனம்!
டிரம்பின் அடுத்த திட்டம் என்ன? அமெரிக்க தேசியக் கொடியால் போர்த்தப்பட்ட ஈரான்!
டிரம்பின் அடுத்த திட்டம் என்ன? உலக வரைபடத்தில் அமெரிக்க தேசியக் கொடியால் போர்த்தப்பட்ட ஈரான்!
தமிழகத்தில் கடந்த 3 நாள்களில் 844 ரௌடிகள் கைது!
தமிழக காவல் துறை அதிரடி நடவடிக்கை பற்றி...
உ.பி.யில் பகலிலும் மின்வெட்டு: மக்கள் போராட்டம்!
உ.பி.யில் வெப்ப அலைக்கு மத்தியில் பகலிலும் மின்வெட்டு...
Advertisement
Advertisement
தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம்
தமிழ்நாட்டில் சில இடங்களில் மின்வெட்டு ஏற்படுவது குறித்து எரிசக்தி வளம் மற்றும் சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் விளக்கமளித்துள்ளார்.
கோவை சிறுமி கொலை! இருவர் கைது; உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு!
கோவை மாவட்டம் சூலூர் அருகே சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உடல் கூராய்வு முடிந்து உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கோவை சூலூர் சிறுமி கொலை: சம்பவ இடத்தில் தமிழக சட்டம்-ஒழுங்கு டிஜிபி ஆய்வு!
கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் தொடர்பாக, தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் ஐபிஎஸ், சம்பவம் நடந்த பகுதிகள் மற்றும் காவல் நிலையத்தில் நேரில் சென்று தீவிர ஆய்வு மேற்கொண்டார்.
சென்னையில் மேகமூட்டம் ஏன்? வானிலை மையம் விளக்கம்
கடந்த ஒரு சில நாள்களாக கோடை வெப்பம் தகித்து வந்த நிலையில், சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
51,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கினார் பிரதமர் மோடி!
அரசின் பல்வேறு துறைகளில் புதிதாகப் பணியில் சேரும் 51,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு காணொளி காட்சியின் வாயிலாக, பணி நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி, சனிக்கிழமை வழங்கினார்.
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் வைகாசி வசந்த உற்சவம்! பக்தர்கள் சுவாமி தரிசனம்!
மதுரை: மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் வைகாசி வசந்த உற்சவ விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
நீட் மறுதேர்வு: மாணவர்களுக்கு சிற்றுண்டி, இலவசப் பேருந்து!
ஜூன் 21 ஆம்தேதி நடைபெறவிருக்கும் நீட் மறுதேர்வில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணமும், முக்கிய இடங்களில் குடிநீர், சிற்றுண்டி போன்றவை வழங்கப்படும் எனவும் பிகார் அரசு சனிக்கிழமை அறிவித்தது.
எரிபொருள் நெருக்கடி: வந்தே பாரத் ரயிலில் சென்ற மகாராஷ்டிர முதல்வர்!
எரிபொருள் நெருக்கடி காரணமாக, வந்தே பாரத் ரயிலில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ், சீரடிக்கு சனிக்கிழமை சென்றுள்ளார்.
சூலூர் சிறுமி கொலை: பெண்கள் பாதுகாப்பில் தனிகவனம் தேவை: முதல்வருக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்!
கோவை அருகே சூலூர் சிறுமி கடத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பெண்களின் பாதுகாப்பு விவகாரத்தில் தனி கவனம் செலுத்தவேண்டும் என்று சனிக்கிழமை டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
10 நாள்களில் 3-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு!
கடந்த பத்து நாள்களில் மூன்றாவது முறையாக சனிக்கிழமை (மே 23) பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.
நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 118.4 டிகிரி! மே 28 வரை நீடிக்கும்
நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 118.4 டிகிரியை தொடும் நிலையில், இது மே 28 வரை நீடிக்கும் என தகவல்.
தங்கம், வெள்ளி இன்றைய நிலவரம்: தங்கம் பவுனுக்கு எவ்வளவு குறைந்தது?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,17,840-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.