உணவே மருந்து

இன்றைய மருத்துவ சிந்தனை: நெல்லிக்காய்

DIN


உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!

நெல்லிக்காய்:

  • நெல்லிக்காய், கறிவேப்பிலை இரண்டையும் தேங்காய் எண்ணெய்யில் போட்டுக் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி நரைக்காது.
  • நெல்லிக்காய்  பொடி , கடுக்காய் பொடி இரண்டையும்  2 கிராம்  அளவு எடுத்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் சளி , மூக்கடைப்பு போன்றவை குணமாகும்.
  • நெல்லிக்காய் , முருங்கைக்காய் , முள்ளங்கி இவை மூன்றையும் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டு வந்தால் கர்ப்பிணிகளுக்குக் கை கால் வீக்கங்கள் வராமல் தடுக்கலாம்.
  • நெல்லிக்காய் சாற்றில் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.
  • நெல்லிக் கனிகளைப் பறித்து தண்ணீரில் போட்டு ஊறவைக்கவும். மறுநாள் காலை அந்தத் தண்ணீரில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் செம்பட்டை முடி கறுப்பாக மாறும்.
  • நெல்லிக்காய் சாறு , திப்பிலி பொடி , தேன் மூன்றையும் சேர்த்துக் குழைத்து  நாக்கில் தடவி வந்தால் வாய்ப்புண் குணமாகும்.
  • நெல்லிக்காய் சாற்றை வாயில் ஊற்றிக் கொப்பளித்து சிறிது நேரம் வாயிலேயே வைத்திருந்து துப்பினால் பல் நோய்கள் அனைத்தும் குணமாகும்.


KOVAI  HERBAL  CARE 
VEGETABLES CLINIC

கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

வடிகாலை ஆக்கிரமித்து கட்டுமானப் பணிகள்: நகா்மன்ற உறுப்பினா் புகாா்

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

SCROLL FOR NEXT