உணவே மருந்து

பற்கள் தானாக ஆடுகின்றனவா? இதோ தீர்வு!

கோவை பாலா

அறிகுறிகள் : வாயுக்களின் சீரற்ற தன்மையினால் வாயு மண்டலம் பாதிப்படையும் போது உதடு ஓரங்களில் வெடிப்பு உண்டாகும், நாக்கில் கூட வெடிப்பு உண்டாகும். மேலும் பற்கள் தானாக ஆடத் தொடங்கும். இவற்றிலிருந்து குணமாக

மண்டலம் - வாயு மண்டலம்
காய் - புடலங்காய்
பஞ்சபூதம் - காற்று
மாதம் - ஆடி
குணம் - தியாகம்
ராசி / லக்கினம்  - கடகம்

சத்துக்கள் : புடலங்காயில் வைட்டமின்கள் ஏ,பி,சி ஆகியவை காணப்படுகின்றன. மெக்னீசியம், மாங்கனீஸ், கால்சியம், இரும்புச் சத்து, பொட்டாசியம், அயோடின் முதலியவை உள்ளன. மேலும் இக்காய் அதிக அளவு நார்சத்து, புரதம், குறைந்த அளவு எரிசக்தி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

தீர்வு : புடலங்காய் (100 கிராம்), வெண் பூசணிக்காய் (100 கிராம்), கொத்தவரங்காய் (5), புதினா (சிறிதளவு), வெற்றிலை (1), மிளகு(2), இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு  தண்ணீர் அல்லது மோர் ஊற்றி அரைத்து ஜூஸாக்கி காலை இரவு வேளை உணவிற்கு முன் வெறும் வயிற்றில் குடித்தபின்பு பசி எடுத்தால் வழக்கமான உணவு எடுத்துக் கொள்ளலாம். ஒரு வேளை உணவில் மேற்கூறியவற்றை நீராவியில் வேக வைத்து பொறியல் செய்து சாப்பிட்டு வரலாம்.

வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

கம்போடியா: ராணுவ தளத்தில் வெடிமருந்து வெடித்ததில் 20 வீரர்கள் பலி

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT