உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!
- வகை 2 சர்க்கரை நோயிலிருந்து விடுபட வகை 2 சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள் தினமும் சிறிதளவு பிஸ்தா சாப்பிட்டு வரவும். இந்த பருப்பில் 60% மினரல் பாஸ்பரஸ் கொண்டுள்ளது. மேலும் அமினோஆசிட்ஸ், பாஸ்பரஸ் ஆசிட்ஸ் குளுக்கோஸ் ஆகியவற்றை குறைக்கவும் உதவிபுரிகிறது. மேலும் பிஸ்தாவில் உள்ள பாஸ்பரஸ் ஆனது அதிக அளவில் உள்ளதால், குளுக்கோஸை அமினோ அமிலமாக சிதைக்கிறது. இதனால் நீரழிவு நோயாளிகளுக்கு பிஸ்தா ஒரு நல்ல பயனுள்ள உணவாகும்.
- ஆரோக்கியமான இரத்தம் உருவாக பிஸ்தா பருப்பை தினமும் சிறிதளவு சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமான இரத்தம் உருவாகும். ஏனென்றால் பிஸ்தா பருப்பில் விட்டமின் B6 ஊட்டச்சத்து அதிகளவு உள்ளது. விட்டமின் B6 ல் ஹீமோகுளோபின் அதிகப்படுத்தக்கூடிய தன்மையும், ஆக்ஸிஜனை ரத்தஓட்டம் வழியாக செல்களுக்கு கொண்டுசேர்க்கும் பொறுப்பு மற்றும் ஆக்ஸிஜனை அளவை அதிகரிக்கும் பணியை செய்கிறது.
- கெட்ட கொழுப்பை நீக்கி நல்ல கொழுப்பு உருவாக தினந்தோறும் சிறிதளவு பிஸ்தா சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைப்பதோடு ஆரோக்கியம் தரக்கூடிய நல்ல கொழுப்பை அதிகரிக்கச்செய்யும்.
- இதயத்தின் ஆரோக்கியம் மேம்பட தினந்தோறும் இதயம் சார்ந்த குறைபாடு உள்ளவர்கள் சிறிதளவு பிஸ்தா பருப்பை சாப்பிட்டு வந்தால் இவற்றில் உள்ள விட்டமின் A மற்றும் E போன்றவை ஆன்டிஆக்ஸிடெண்டுகளை அதிகப்படுத்தி இரத்த நாளங்களை பாதுகாக்கும் மேலும் இதயநோய் அபாயத்தை குறைத்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
- ஆரோக்கியமான கண்பார்வை பெற கண்பார்வையில் குறைபாடு உள்ளவர்கள் தினந்தோறும் சிறிதளவு பிஸ்தா பருப்பை சாப்பிட்டு வந்தால் இவற்றில் உள்ள சியாசாந்தின் (Zeaxanthin) மற்றும் லூட்டின் (Luetin) என்ற இரண்டு கரோட்டினாய்டுகள் காணப்படுகிறது. இந்த கரோட்டினாய்டுகள் கண்ணின் விழித்திரையை சீரழியாமல் பாதுகாத்து கண்பார்வைக்கு வழிவகுக்கிறது. மேலும் இவ்விரு கரோட்டினாய்டுகளும் புற ஊதாக்கதிர்களினால் தோல் பாதிப்படையாமல் தடுப்பதற்கும், இருதய நோய்கள் வராமல் தடுப்பது மற்றும் கண்புரை (Cataract) நோய்களிலிருந்து கண்களை பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. கண்பார்வையையும் மேம்படுத்தும்.
KOVAI HERBAL CARE
VEGETABLES CLINIC
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot & Auricular Therapist
Cell : 96557 58609
Covaibala15@gmail.com