உணவே மருந்து

இன்றைய மருத்துவ சிந்தனை: சீந்தில் கொடி

தினமணி

உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!

  • ஒற்றைத் தலைவலி குணமாக சீந்தில் கொடி , சீரகம் இவை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச்  சாப்பிட்டு வந்தால் ஒற்றைத் தலைவலி குணமாகும்.
  •  குடல் புண் குணமாக சீந்தில் கொடி , வில்வம் இலை இவை இரண்டையும் சம அளவு சேர்த்து அரைத்து தினமும் ஐந்து கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் குடல் புண் குணமாகும்.
  • சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க சீந்தில் கொடியைப் பொடி செய்து வைத்துக் கொண்டு  காலை மாலை என இருவேளையும் ஐந்து கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.
  • கண்பார்வை கூர்மையாக சீந்தில் கொடி , பொன்னாங்கண்ணிக் கீரை இவை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து தினமும் ஐந்து கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை கூர்மையாகும்.
  • வழுக்கைத் தலையில் முடி வளர சீந்தில் கொடியை நன்றாக அரைத்து வழுக்கைத் தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் முடி முளைக்கும்.
  • சீந்தில் சர்க்கரை செய்யும் முறை: முதிர்ந்த, முற்றிய கொடியை, மேல் தோலை உரித்து, நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக நறுக்கி, நன்றாக இடித்து, தேவையான அளவு தூய்மையான நீரில் கரைத்து, 4 மணி நேரம் வைத்திருந்து நீரை வடிகட்டிக் கொள்ள வேண்டும். வடிகட்டியது போக சிறிதளவு மாவு போன்ற பொருள் பாத்திரத்தின் அடியில் படிந்திருக்கும். மீண்டும் மீண்டும் நீர்விட்டு இதனைத் தெளியவைத்து, வடிகட்டி எடுத்து நிழலில் உலர்த்தினால் வெண்மையான தூள் கிடைக்கும். இதுவே எளிய முறையில் தயாரிக்கப்பட்ட சீந்தில் சர்க்கரை ஆகும். இதனை, ஒரு கிராம் அளவில் உள்ளுக்குச் சாப்பிட, வயிற்றுக் கடுப்பு, வயிற்றுப்போக்கை நீக்கும். கல்லீரல், மண்ணீரல் ஆகியவை சீந்தில் சர்க்கரை சாப்பிட உறுதியாகும். உடல் எடை, உறுதி அதிகமாகும். பிற மருந்துகளுடன் சீந்தில் சர்க்கரை சிறிதளவு சேர்த்துக் கொடுக்க பலவகையான நோய்களும் விரைவில் குணமாகும்.

KOVAI  HERBAL  CARE VEGETABLES CLINIC

கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.

Cell  :  96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT