உணவே மருந்து

முறையற்ற ஜீரணத்தினால் நரம்பு மண்டலம் பலவீனமடைந்து அதனால் உண்டாகும் ஞாபகசக்தி குறைபாடு நீங்க

பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா

மண்டலம் - ஜீரண மண்டலம்

காய் - வெண் பூசணிக்காய்

பஞ்சபூதம் - நிலம்

மாதம் - சித்திரை

குணம் - தைரியம்

ராசி / லக்கினம்  -  மேஷம்

சத்துக்கள் : வைட்டமின் B,C, கால்சியம், பொட்டாசியம், இரும்புச் சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்து

தீர்வு : காலை உணவாக (100 கிராம்) அளவு வெண் பூசணிக்காயை எடுத்து (தோலுடன், விதையுடன்) நறுக்கி  அதனுடன் கொத்தவரங்காய் (5), மிளகு (2), தக்காளி (1) இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து ஜூஸாக்கி காலை வேளை உணவாக சாப்பிட்டு வரவும்.

வெண் பூசணிக்காயை நறுக்கி நீராவியில் வேக வைத்து பொரியலாக செய்து மதிய வேளை உணவில் அதிகமாக எடுத்து வந்தால் ஞாபகசக்தி குறைபாடு நீங்கி மூளை சுறுசுறுப்புடன் இயங்கும். மேலும் வலது, இடது மூளை சமநிலையில் இயங்கும். (தேவைப்படுமெனில் உப்பு சேர்த்துக் கொள்ளவும்)

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியார் சிலைக்கு விஜய் மரியாதை! | TVK Vijay

ரயில்வே மருத்துவமனைகளில் வேலை வேண்டுமா?

பெண்ணல்ல வீணை... அனுபமா பரமேஸ்வரன்!

கவனம் ஈர்க்கும் ரெட்ட தல பாடல் அப்டேட்!

கவிதை எழுதவா... பார்வதி நாயர்!

SCROLL FOR NEXT