உணவே மருந்து

இன்றைய மருத்துவ சிந்தனை: வெங்காயத் தாள்

தினமணி

உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!

  • உடல் சூடு குறைய வெங்காயத் தாளை அரைத்து (100 மில்லி) அளவு எடுத்து அதனுடன்  வெந்தயம் (100 கிராம்) ஊறவைத்து உலர்த்திப் பொடி செய்து  வைத்துக் கொண்டு தினமும் ஒரு ஸ்பூன் அளவு  காலை மாலை என இருவேளையும் சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறையும்.
  • குடற் புண், வாய்ப் புண் குணமாக வெங்காயத் தாள், துத்தி இலை  இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து அதனுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து வெறும் வயிற்றில்  சாப்பிட்டு வந்தால் குடற் புண்  மற்றும் வாய்ப்புண் குணமாகும்.
  • உடலுறவில் நீடித்த இன்பம் பெற வெங்காயத் தாள், ஒரிதழ் தாமரை இவை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து காலை மற்றும் மாலை என இருவேளையும் சாப்பிட்டு வந்தால் விந்தின் சூடு குறையும்.உடலுறவில் நீடித்த இன்பம் கிடைக்கும்.
  • தீராத தாகம் தீர வெங்காயத் தாளுடன் சீரகம், சோம்பு சேர்த்து அரைத்து கஷாயமாகச் சாப்பிட்டு வந்தால் தீராத தாகம் தீரும்.
  • மாதவிலக்கு சார்ந்த பிரச்சனை தீர வெங்காயத் தாளை அரைத்து அதில் கருப்பு எள், கருஞ்சீரகம் இரண்டையும் சம அளவில் கலந்து நன்கு  காயவைத்து அரைத்துக் கொள்ளவும்.மாதவிலக்கு வராத சமயங்களில் ஓரு ஸ்பூன் அளவுக்கு காலை மாலை என மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால்  மாதவிலக்கு சம்மந்தமான  பிரச்சனை தீரும்.
  • சளி, இருமல், ஆஸ்துமா குணமாக வெங்காயத் தாளை அரைத்து (100 கிராம்) எடுத்து அதனுடன் திப்பிலி (50 கிராம்) அளவு கலந்து காயவைத்துப் பொடியாக்கிக் கொள்ளவும். இவற்றை அரை  கிராம் பொடியை எடுத்து தேனில் கலந்து காலை மாலை என இருவேளையும்  சாப்பிட்டு வந்தால் சளி, இருமல், ஆஸ்துமா போன்றவை குணமாகும்.

KOVAI  HERBAL  CARE VEGETABLES CLINIC

கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.

Cell  :  96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைப்பேசி திருடிய கும்பலுடன் மோதல்: மும்பை காவலா் விஷ ஊசி செலுத்தி கொலை

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் வழக்கு: தொல்லியல் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

மத சுதந்திர மீறல்கள் குறித்த அமெரிக்க ஆணைய அறிக்கை: இந்தியா கண்டனம்

திருச்செந்தூா் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு?

இலஞ்சி பாரத் பள்ளியில் உழைப்பாளா் தின கொண்டாட்டம்

SCROLL FOR NEXT