உணவே மருந்து

இன்றைய மருத்துவ சிந்தனை: வெள்ளைப் பூண்டு

தினமணி

உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!

  • மூட்டுவாதம், இதய நோய்கள்  குணமாக வெள்ளைப்பூண்டுடன் (2 பல்), சிறிதளவு வாதநாராயணன் இலையைச் சேர்த்து அரைத்து காலை, மாலை என இருவேளையும் சாப்பிட்டு வந்தால் மூட்டுவாதம் மற்றும் இதயம் சார்ந்த பிரச்சனைகள் குணமாகும்.
  • திக்குவாய் குணமாக வெள்ளைப்பூண்டு சாறு (200 மில்லி) எடுத்து அதனுடன் அக்ரகாரத்தை (100 கிராம்) விழுதாக அரைத்து  தேன் சேர்த்துக் காய்ச்சவும் .இதனை காலை, மாலை என இருவேளையும் ஒரு ஸ்பூன் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் ஆறே மாதங்களில் திக்குவாய் குணமாகும்.
  • சுளுக்கு உடனே குணமாக பூண்டு  (2 பல்) அதனுடன் சிறிது உப்பு எடுத்து இரண்டையும் சூடுபடுத்தி பின்பு பூண்டை இடித்து சாறு எடுத்து அதை சுளுக்கு உள்ள பகுதியில் தடவினால் சுளுக்கு உடனே குணமாகும்.
  • பேன் தொல்லை தீர பூண்டு, கற்பூரம், எலுமிச்சம் பழச்சாறு மூன்றையும் சேர்த்து அரைத்து தலையில் தேய்த்துக் குளித்துவந்தால் பேன் தொல்லைத் தீரும்.
  • நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க பூண்டு, வெங்காயம் இவை இரண்டையும் நெய்யில் வதக்கிச் சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
  • தலை வலி, தலைப்பாரம், மூக்கடைப்பு நீங்க பூண்டு, சீரகம், இஞ்சி இவை அனைத்தையும் தலா 5 கிராம் அளவு எடுத்து இடித்து அதனுடன் பனைவெல்லம் சேர்த்துக் கஷாயம் வைத்துக் காலை மாலை என இருவேளையும் குடித்து வந்தால் தலை வலி, தலைப்பாரம், மூக்கடைப்பு ஆகியவைத் தீரும்.

KOVAI  HERBAL  CARE VEGETABLES CLINIC

கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
Cell  :  96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT