உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!
- வாயுக் கோளாறுகள், மலச்சிக்கல் நீங்க நிலாவரை இலை, சுக்கு, ஓமம், வாய்விளங்கம் அனைத்தையும் சம அளவு எடுத்து அரைத்து, இரவில் மட்டும் இரண்டு கிராம் பொடியைச் சுடுநீரில் கலந்து குடித்து வந்தால் வாயுக் கோளாறுகள் மற்றும் மலச்சிக்கல் நீங்கும்.
- வாயுப்பிடிப்பு மற்றும் உடல் வலி நீங்க நிலாவரை இலையுடன் ஒமம் சேர்த்து வேகவைத்து எடுத்து துணியில் சுற்றி ஒத்தடம் கொடுத்தால் வாயுப் பிடிப்பு மற்றும் உடல் வலி ஆகியவை நீங்கும்.
- குடல் பூச்சிகள் வெளியேற நிலாவரை இலை(5), பூண்டு (1 பல்) இவை இரண்டையும் சேர்த்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் குடல் பூச்சிகள் ஒழியும்.
- இளநரை நீங்கி முடி செழிப்பாக வளர நிலாவரைப் பூ, ஆவாரம் பூ, சரக்கொன்றைப் பூ, பொன்னாவரைப் பூ, செம்பருத்திப் பூ சுருள் பட்டை இவை அனைத்தையும் தலா 50 கிராம் எடுத்து பீட்ரூட் சாற்றில் (அரை லிட்டர்) இரண்டு நாள் ஊறவைத்து உலர்த்திப் பொடி செய்து, தினமும் தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் இளநரை மறையும். முடியும் நன்றாகச் செழித்து வளரும்.
- தலைவலி, ஒற்றைத் தலைவலி நீங்க நிலாவரை, சோம்பு, சீரகம், அதிமதுரம் அனைத்தையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட்டு வந்தால் தலை வலி, ஒற்றைத் தலைவலி தீரும்.
- உடல் பருமன் குறைய நிலாவரை, பொன்னாங்கண்ணி, ஆவாரை இவை மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து இரவில் மட்டும் 2 கிராம் பொடியை சுடுநீரில் கலந்து ஆறு மாதங்கள் வரை சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.
KOVAI HERBAL CARE VEGETABLES CLINIC
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் காய்கறி சிகிச்சையாளர்.
Cell : 96557 58609 / Covaibala15@gmail.com