உணவே மருந்து

இன்றைய மருத்துவ சிந்தனை: மஞ்சணத்தி

DIN

உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!

பல் சொத்தை குணமாக மஞ்சணத்தி காய்களை (முதிர்ந்தது) சேகரித்து உப்பு நீரில் ஊற வைத்து வெயிலில் காய வைத்து சுட்டு கரியாக்கி சலித்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த தூளால் பல் துலக்கி வந்தால் பல் சொத்தை குணமாகும்.

மாதவிடாய் கோளாறுகள் நீங்க மஞ்சணத்தி இலையை பசையாக அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து, அதே அளவு அதன் காயையும் அரைத்துச் சேர்த்து சிறிது மிளகுத்தூள், சீரகம்(கால் ஸ்பூன்) சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும். அதில் 50 முதல் 100 மி.லி வரை எடுத்து 48 நாள்கள் தொடர்ந்து காலை வேளை மட்டும் குடித்து வந்தால் மாதவிடாய்க் கோளாறுகள் நீங்கிவிடும்.

காய்ச்சல் மற்றும் வயிற்றுக்கோளாறுகள் அனைத்தும் குணமாக  மஞ்சணத்தியின் பட்டை சிறிதளவு எடுத்துக் கொண்டு சீரகம் (அரை ஸ்பூன்) , பனங்கற்கண்டு சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து கஷாயம் செய்து கொள்ள வேண்டும். அதை வடிகட்டி சுமார் 50 மி.லி அளவு காலை மற்றும் இரவு உணவுக்கு முன்  அருந்தி வந்தால் காய்ச்சலைத் தடுப்பதுடன் வயிற்றுக் கோளாறுகளையும் குணப்படுத்தும். 

தொண்டைச் சார்ந்த பிரச்சனைகள் தீர மஞ்சணத்திக் காயை அரைத்துச் சாறு எடுத்து தொண்டையில் பூசி வந்தால் தொண்டை சார்ந்த  நோய்கள் நீங்கும்.

இடுப்பு வலி மறைய மஞ்சணத்தின் இலையை இடித்துப் பிழிந்து சாறு எடுத்து இடுப்புவலி உள்ள இடங்களில் பூசி வந்தால் வலி மறையும் .

குழந்தைகளின் வயிற்று உப்புசம் குணமாக மஞ்சணத்தி இலை (5) , வேப்பங்கொழுந்து (ஒரு கொத்து) இரண்டையும் நன்றாக வதக்கி, இதனுடன் சீரகம் (1 டீஸ்பூன்) , ஓமம் (1டீஸ்பூன்) , பொரித்த பெருங்காயம் (ஒரு சிட்டிகை) சேர்த்து அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சி காலை மாலை என இரு வேளைகள் தலா (2டீஸ்பூன்) அளவு உள்ளுக்கு கொடுத்து வந்தால்  வயிற்று உப்புசம் குணமாகும்.

KOVAI  HERBAL  CARE VEGETABLES CLINIC

கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist

Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT