தீராத மலச்சிக்கலைத் தீர்க்கும் வழி
முதலில் முளைக்கீரையை அலசி ஆய்ந்து நறுக்கி வைத்துக் கொள்ளவும்
முளைக் கீரை கருத்தக்கார் நொய்யரிசிக் கஞ்சி
தேவையான பொருட்கள்
முளைக் கீரை - ஒரு கட்டு
கருத்தக்கார் அரிசி - 100 கிராம்
எள்ளு - 15 கிராம்
கொள்ளு - 50 கிராம்
Advertisement
செய்முறை
- முதலில் முளைக்கீரையை அலசி ஆய்ந்து நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- எள்ளு மற்றும் கொள்ளுவை நன்றாக சுத்தம் செய்து வாணலியில் போட்டு வறுத்து வைத்துக் கொள்ளவும்.
- கருத்தக்கார் அரிசியை ஒன்றிரண்டாக உடைத்து நொய்யாக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
- ஒரளவுக்கு அரிசி வெந்ததும் நறுக்கி வைத்துள்ள முளைக்கீரை மற்றும் வறுத்து வைத்துள்ள எள்ளு , கொள்ளு ஆகியவற்றைச் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு நன்கு வேக வைத்து கஞ்சி பதம் வந்தவுடன் இறக்கி வைத்து குடிக்கவும்.
பயன்கள்
- இந்தக் கஞ்சி தீராத மலக்கட்டை உடைத்து மலம் எளிதாக வெளியேற்றி மலச்சிக்கலை போக்க உதவும் ஆரோக்கியமானக் கஞ்சி.
- மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு வரப்பிரசாதமாக விளங்கும் கஞ்சி.
படுக்கப் போகும் முன்
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
KOVAI HERBAL CARE VEGETABLES CLINIC
கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் காய்கறி சிகிச்சையாளர்.
Cell : 96557 58609, 73737 10080
Covaibala15@gmail.com