முகப்பு
உணவே மருந்து

அடிக்கடி வயிற்று பிரச்னையில் அவதிப்படுகிறீர்களா?

அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.

Updated On : 16 டிசம்பர், 2019 at 11:33 AM
பகிர்:

அகத்திக் கீரைச் சாம்பார்

தேவையான பொருட்கள்

அகத்திக் கீரை -  ஒரு கட்டு
புளி -  50 கிராம்
தனியா -  ஒரு ஸ்பூன்
கடுகு - அரை ஸ்பூன்
சின்ன வெங்காயம் -  25 கிராம்
தக்காளி  - 3
தேங்காய் - அரை மூடி
எண்ணெய் -  2 ஸ்பூன்
துவரம் பருப்பு -  ஒரு கப்
மிளகு  -  ஒரு ஸ்பூன்
பெருங்காயம் , மஞ்சள்த் தூள் , உப்பு - தேவையான அளவு

Advertisement

செய்முறை

  • முதலில் அகத்திக் கீரையைத் தண்ணீரில் நன்கு அலசி, சுத்தப்படுத்திக் கொள்ளவும்.
  • அடுத்து தனியாவை வறுத்து, தேங்காயைத் துருவி மற்றும் வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
  • துவரம் பருப்புடன் மஞ்சள், பெருங்காயம் சேர்த்து வேக வைத்து நன்றாகக் கடைந்து கொள்ளவும்.
  • வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு அதில் தக்காளியை நறுக்கி போட்டு வதக்கி, அதனுடன் மிளகைத் தூளாக்கி சேர்த்து ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள அனைத்தையும் ஒவ்வொன்றாகக் கலந்து உப்பு சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.
  • பொடி வாசனை அடங்கியதும் தாளித்து கொட்டி  இறக்கவும்.

பயன்கள்
 
இந்த அகத்திக் கீரைச் சாம்பாரை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் வயிற்றுப் புண் மற்றும் கண் பார்வை குறைபாடுகளையும் சீர் செய்யும்.

படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
Cell : 96557 58609, 73737 10080
Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.