உணவே மருந்து

ஆண்மை சக்தி, நீடித்த போகம் மற்றும் உடல் வலு பெற உதவும் சூரணம்!

கோவை பாலா

கானாம் வாழைக் கீரை சூரணம்

தேவையான பொருட்கள்

கானாம் வாழைக் கீரை - அரை கிலோ (நிழலில் உலர்த்தியது)
முந்திரிப் பருப்பு - அரை கிலோ

செய்முறை : கானாம் வாழைக் கீரையை வாங்கி சுத்தப்படுத்தி நிழலில் உலர வைத்து எடுத்துக் கொள்ளவும். முந்திரியை லேசாக வறுத்துக் கொள்ளவும். இரண்டையும் ஒன்றாக கலந்து மிக்ஸியில் போட்டு அரைத்து பொடியாக்கிக வைத்துக் கொள்ளவும்.

பலன்கள் : இந்தப் பொடியை தினமும் காலை மற்றும் மாலை என இரு வேளையும் தலா ஒரு ஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்து அல்லது வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்தோ சாப்பிட்டு வந்தால் ஆண்மையில் எழுச்சி உண்டாகும். நீடித்த போகம் மற்றும் உடலும் வலு பெறும் அற்புத சூரணமாக விளங்கும்.

இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும்: ஆா்ஜேடி தலைவா் லாலு

பிளஸ் 2: சென்னிமலை கொங்கு பள்ளி 100 சதவீத தோ்ச்சி

பிளஸ் 2: பெருந்துறை அரசு ஆண்கள் பள்ளி 96.25 % தோ்ச்சி

இந்திய குடும்பங்களின் சேமிப்பு ரூ.14.16 லட்சம் கோடியாக சரிவு

பிளஸ் 2: சிவகிரி அரசுப் பெண்கள் பள்ளி 100% தோ்ச்சி

SCROLL FOR NEXT