உணவே மருந்து

புதுமண தம்பதிகளுக்கு உணர்வைப் பெருக்கி உறவைச் சிறக்கச் செய்யும் அற்புதமான உணவு 

கோவை பாலா

அரைக் கீரை தோசை

தேவையான பொருட்கள்

அரைக் கீரை - ஒரு கட்டு
கொத்தமல்லித் தழை - ஒரு கட்டு
கடலை மாவு - கால் கிலோ
அரிசி மாவு - 50 கிராம்
இஞ்சி - ஒரு துண்டு
சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடி (நறுக்கியது)
மிளகு - 5 கிராம்
பூண்டு - 6 பல்
சோம்பு - 10 கிராம்
வேர்கடலை - 100 கிராம்
நெய் - 50 கிராம்
உப்பு - தேவையான அளவு

செய்முறை : முதலில் கடலை மாவு, அரிசி மாவு இரண்டையும் நன்றாகச் சலித்து எடுத்து அத்துடன் பூண்டு (அரிந்தது), வெங்காயம், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து பிசைந்து கொள்ளவும். அடுத்து இஞ்சியை அரைத்து, சோம்பை தூளாக்கி, கொத்தமல்லித் தழை நறுக்கி, மிளகைத் தூள் செய்து அனைத்தையும் மாவுடன் சேர்க்கவும். பின்பு வேர்கடலையை உடைத்து மாவுடன் சேர்த்து ஒன்றாக கலக்கிக் கொள்ளவும். பின்பு தோசைக்கல்லில் நெய் வார்த்து மாவை கல்லில் ஊற்றி தோசை வார்த்து சாப்பிடவும்.

பயன்கள் : இந்த தோசையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ரத்த விருத்தி உண்டாகும். இந்த தோசை புதுமண தம்பதிகளுக்கிடையே உணர்வைப் பெருக்கி உறவைச் சிறக்கச் செய்யும்.

இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாவோயிஸ்ட் இயக்கத்துக்கு ஆள் சோ்த்ததாக பதியப்பட்ட வழக்கு: இருவா் வீடுதலை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மே தின கொடியேற்று விழா

குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

காஞ்சிபுரத்தில் மருத்துவா்கள் கருத்தரங்கம்

காஞ்சிபுரத்தில் இரு சக்கர வாகனம் பழுது பாா்ப்போா் மே தின பேரணி

SCROLL FOR NEXT