உணவே மருந்து

பித்தத்தை தணித்து பசியைத் தூண்டும் அற்புதமான உணவு

முதலில் கறிவேப்பிலையை வாணலியில் போட்டு நன்கு மொறு மொறுப்பாக வறுத்துக் கொள்ளவும்.

கோவை பாலா

கறிவேப்பிலை தொக்கு

தேவையான பொருட்கள்

கறிவேப்பிலை - அரை கிலோ
மிளகு -  25 கிராம்
கடுகு -  ஒரு ஸ்பூன்
உளுந்தம் பருப்பு -  50 கிராம்
பெருங்காயம்  -  5 கிராம்
நல்லெண்ணெய் -  50 மி.லி
புளி - எலுமிச்சம் பழ அளவு
உப்பு -  தேவையான அளவு

செய்முறை : முதலில் கறிவேப்பிலையை வாணலியில் போட்டு நன்கு மொறு மொறுப்பாக வறுத்துக் கொள்ளவும். பின்பு சிறிது எண்ணெய் விட்டு அதனுடன் கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயம், மிளகு அனைத்தையும் போட்டு வறுத்துக் கொள்ளவும். கறிவேப்பிலை மற்றும் வறுத்து வைத்துள்ள பொருட்களை உரலில் போட்டு இடித்தோ அல்லது மிக்ஸியில் போட்டு அதனுடன் உப்பு மற்றும் புளி சேர்த்து  அனைத்தையும் அரைத்து வைத்துக்கொள்ளவும்.

பலன்கள் : இந்த கறிவேப்பிலை தொக்கை  தினமும் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் அதிகப் படியான பித்தத்தை தணித்து நன்கு பசியை தூண்டக் கூடிய அற்புதமான உணவாக பயன்படும்.

இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மோதும் ஆஷஸ் தொடா் இன்று தொடக்கம்

வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஒத்திவைப்பு

சேலத்தில் டிச. 4-இல் விஜய் பிரசாரம்! அனுமதி கேட்டு தவெக நிா்வாகிகள் மனு

க்யூ.எஸ். தரவரிசைப் பட்டியல்: உலகளவில் விஐடி 352-ஆம் இடம் இந்திய அளவில் 7-ஆம் இடம்

உடன்குடி அருகே 7 மாடுகள் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

SCROLL FOR NEXT