உணவே மருந்து

நாட்பட்ட சைனஸ், சளி, கபம் ஆகியவற்றை முற்றிலும் குணப்படுத்தும் சூப்

கோவை பாலா

தூதுவளை சூப்
 
தேவையான பொருட்கள்

 
தூதுவளை இலை - 100 கிராம்
வெங்காயம் - 25 கிராம்
தக்காளி - 2 
துவரம் பருப்பு - 50 கிராம்
பட்டை, இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 5 பல்
மஞ்சள் - ஒரு துண்டு
தனியா - ஒரு ஸ்பூன்
சோம்பு , சீரகம் , ஒமம் - 10 கிராம் (தலா)
தேங்காய்த் துருவல் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை

முதலில் தூதுவளை இலையை ஆய்ந்து பொடிப் பொடியாக அரிந்து அத்துடன் துவரம் பருப்பு, பூண்டு சேர்த்து வேக வைத்து இறக்கி நன்கு கடைந்து வைத்துக் கொள்ளவும். பிறகு வாணலியில் தனியா, சோம்பு, சீரகம், ஒமம், தேங்காய்த் துருவல், பட்டை, இஞ்சி, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து வறுத்துக் கொள்ளவும். சிறிது எண்ணெய்யில் வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நறுக்கிப் போட்டு நன்கு வதக்கிய பின்பு அதனுடன் தூதுவளை மசியலையும், வறுத்து வைத்துள்ள பொருட்களையும் சேர்த்து ஒரு கொதிநிலை வந்ததும் தேவையான அளவு உப்பு சேர்த்து இறக்கி விடவும்.

யன்கள் : இந்த தூதுவளை சூப்பை நாட்பட்ட சைனஸ், சளி, கபம் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு மிகச் சிறந்த மருந்தாக அமையும். குறைபாடும் சீராகும்.

இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் வாக்களிக்காதது ஏன்?: ஜோதிகா விளக்கம்!

கண் அழைக்குது..!

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

SCROLL FOR NEXT