உணவே மருந்து

மாதவிலக்குக் கோளாறுகளை முறைப்படுத்தும் கீரை அடை

முதலில் பச்சரிசியை நன்கு ஊற வைத்து கழுவிக் கொள்ளவும். கழுவிய அரிசியுடன் கல்யாண முருங்கைக் கீரை இலை

கோவை பாலா

கல்யாண முருங்கைக் கீரை அடை

தேவையான பொருட்கள்

கல்யாண முருங்கைக் கீரை - ஒரு கைப்பிடி அளவு
சீரகம் - அரை ஸ்பூன்
மிளகு - ஒரு ஸ்பூன்
பச்சரிசி - ஒரு கப்
எண்ணெய் - 50 . மி.லி
உப்பு -  தேவையான அளவு

செய்முறை : முதலில் பச்சரிசியை நன்கு ஊற வைத்துக் கழுவிக் கொள்ளவும். கழுவிய அரிசியுடன் கல்யாண முருங்கைக் கீரை இலை, உப்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து  மாவாக்கி கொள்ளவும். மாவுடன்  தேவையான அளவு கொத்தமல்லித் தழைகளை நறுக்கி போட்டு, கலக்கி அடையாகச் செய்து சாப்பிடவும்.

பயன்கள் : இந்த கல்யாண முருங்கைக் கீரை அடையை சாப்பிடுவதன் மூலம் நாட்பட்ட மாதவிலக்கு கோளாறுகளை சரி செய்து முறைப்படுத்தும் ஆற்றல் உள்ளது. மேலும் இந்தக் கீரை மூலம் டான்சில் பிரச்னை தீரும். சளி, இருமல் குணமாகும்.

இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குற்றாலத்தில் சோமவாரத்தை முன்னிட்டு பெண்கள் சிறப்பு பூஜை

பேருந்து இயக்குவதில் பாகுபாடு: போக்குவரத்துத் துறை செயலா், மாவட்ட ஆட்சியருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையம் குறிப்பாணை

படைப்பாற்றலை பாதிக்குமா ஏ.ஐ. தொழில்நுட்பம்?

டெஃப்லிம்பிக்ஸ்: அனுயா, பிரஞ்சலிக்கு தங்கம், வெள்ளி

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பயிற்சிப் பயிலரங்கு

SCROLL FOR NEXT