உணவே மருந்து

புற்றுநோயாளிகளுக்கு ஆரோக்கிய துணை இது!

கேரட்டை நன்றாக கழுவி சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

கோவை பாலா

கேரட் துவையல்

தேவையான பொருட்கள்

கேரட் - 100 கிராம்
கடலைப் பருப்பு - 30 கிராம்
சிறு பருப்பு - 20 கிராம்
மிளகு - 10 கிராம்
உப்பு - தேவையான அளவு

செய்முறை : கேரட்டை நன்றாக கழுவி சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கடலைப் பருப்பு மற்றும் சிறுபருப்பை வறுத்துக் கொள்ளவும். பின்பு கேரட்டுடன் பருப்பு மற்றும் மிளகு, உப்பு சேர்த்து நன்றாக அரைத்து துவையலாக்கிக் கொள்ளவும்.

பயன்கள் : இந்த துவையலை தினமும் உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்தசோகை நீங்கும். குடல் புண்ணை ஆற்றும் ஆற்றல் இந்த துவையலுக்கு உண்டு. மேலும் புற்றுநோயாளிகளுக்கு மிகச் சிறந்த துணை உணவாக தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளவும்.

இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை: பவுன் ரூ.90,000-ஐ கடந்தது!

பிரசாந்த் கிஷோருடன் கைகோக்கும் சிராக் பாஸ்வான்? பிகார் தே.ஜ. கூட்டணியில் விரிசலா?!

கரூரில் காயமடைந்தவர்களுக்கு நிவாரண நிதி வழங்கிய செந்தில் பாலாஜி!

தீபாவளியை அரசு விடுமுறையாக அறிவித்தது கலிபோர்னியா!

பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர் மும்பை வந்தடைந்தார்!

SCROLL FOR NEXT